சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு அலுவலகங்களை குறி வைக்கும் சிபிஐ.. சென்னை உட்பட 150 இடங்களில் ரெய்டு.. நடுக்கத்தில் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் 150 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே, நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை குறிவைத்து இந்த ரெய்டு நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CBI officials are conducting raids at 150 locations across the country

பொது மக்களாலும், சிறு வியாபாரிகளும் ஊழல் நடப்பதாக அடிக்கடி புகார்கள் கூறப்பட்ட இடங்களாக தேர்ந்தெடுத்து சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, காந்திநகர், கோவா, போபால், பாட்னா, சிம்லா, ஸ்ரீநகர், டெல்லி என, நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்று இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

யாரும் பதறாதீங்க.. பொருளாதாரம் வளரப்போகுது.. களத்துக்கு வந்தார் தலைமை பொருளாதார ஆலோசகர் யாரும் பதறாதீங்க.. பொருளாதாரம் வளரப்போகுது.. களத்துக்கு வந்தார் தலைமை பொருளாதார ஆலோசகர்

ரயில்வே துறை அலுவலகம், நிலக்கரி, சுங்கத்துறை, உணவுக்கழகம், மின்சார துறை, போக்குவரத்து துறை, சார் பதிவாளர் அலுவலகம், ஜிஎஸ்டி, சுங்கத்துறை, பொதுத்துறை வங்கிகள், விவசாயம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலகங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

English summary
CBI officials are conducting raids at 150 locations across the country including Chennai, Madurai, Hyderabad and Bangalore today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X