சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு

    சென்னை: அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது.

    தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு பல்வேறு சொத்துக்கள், நிலங்கள் இருக்கிறது. அதேபோல் சில இடங்களில் இவர்கள் சார்பாக கல்லூரிகளும், பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் ஊழல் நடந்துள்ளதாக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.

    CBI raids AIADMK MP Anwar Raja home in Wakf Board Case

    மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை முறைப்படி விசாரிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    தற்போது இதன் காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது. வக்ஃபு வாரிய தலைவராக அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா இருக்கிறார். இதானால் எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.

    மாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா! மாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா!

    நேற்றே அன்வர் ராஜாவிடம் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தற்போது அவரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதி எம்.பி ஆவார்.

    இவருக்கு இந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBI raids AIADMK MP Anwar Raja home in Wakf Board related Case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X