சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்டிஇ இணையதளத்தில் சேர்க்கப்படாத சிபிஎஸ்இ பள்ளிகள்.. கல்வித்துறை அலட்சியம் என புகார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை செய்வதற்கான ஆர்டிஇ இணையதளத்தில், சி.பி.எஸ்.இ பள்ளிகளை இன்னும் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித்துறையின் ஆர்டிஇ விண்ணப்ப பதிவிற்கான இணையத்தில், கடந்த ஆண்டு வரை மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகளும் சேர்க்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

CBSE schools that are not included in the RTE website.. parents complaint on education department

ஆனால் கடந்த 21ம் தேதி ஆர்டிஇ சேர்க்கைக்கான பதிவு தொடங்கியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த இணையத்தில் இடம்பெறாதது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்கள், சமூகத்தில் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்தும் போது நிறைய குளறுபடிகள் நிகழ்வதாக கூறியுள்ளனர். தனியாரிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் வருவதாகவும், இந்த எதிர்ப்புகளை தாண்டி பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.

Tamilnadu sslc result 2019: ஏப்ரல் 29ம் தேதி காலை வெளியாகிறது தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! Tamilnadu sslc result 2019: ஏப்ரல் 29ம் தேதி காலை வெளியாகிறது தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

அப்போது தான் ஒட்டு மொத்த சமூகம் வளர்வதற்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளனர். அனைத்து பள்ளிகளும் ஆர்டிஇ தளத்தில் இணைக்கப்படும் என்ற தகவலால், கடந்த ஆண்டு வரை நேரடியாக ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கி வந்த சிபிஎஸ்இ பள்ளிகளும் அதனை தற்போது கைவிட்டுள்ளன. இதனால் ஆன்லைன் தளத்திலும் விண்ணப்பிக்க முடியாமல், நேரடியாகவும் சேர்க்கை பெற முடியாமல் பெற்றோர்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பொருளாதாரத்தில் நலிவுற்றோர் மற்றும் சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது விதி. தொடக்கம் முதலே சிபிஎஸ்இ உள்ளிட்ட பிறப்பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகளை, முழுமையாக இந்த வரம்புக்குள் கொண்டு வர கல்வித்துறை ஆர்வம் காட்டவில்லை என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
website for student enrollment under the Compliance Rights Act in Tamil Nadu has been causing controversy over the absence of CBSE schools
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X