சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுராத்திரி.. விளக்கை அணைத்துவிட்டு.. மொத்தம் 5 பேர்.. 1 முதல் 3 மணி வரை.. வைரலாகும் வீடியோ

பைக்குகளை திருடும் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    விளக்கை அணைத்துவிட்டு.. 5 பேர் பைக் திருட்டில் ஈடுபாடு

    சென்னை: நடுராத்திரி.. விளக்கை அணைத்துவிட்டு மொத்தம் 5 பேர் இந்த வேலையை செய்கிறார்கள்.. அதுவும் 1 மணி முதல் 3 மணி வரைதான் இந்த கூத்து நடக்கிறது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.

    சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கருணாகரன். இவர் அரசு ஆதார் சேவை மையத்தில் பணியில் உள்ளார் . இன்னொருவர் சேஷாத்திரி என்பவர். இவர் தனியார் பொறியியல் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேனேஜராக வேலை செய்துவருகிறார்.

    இவர்கள் 2 பேருமே வழக்கமாக இரவு நேரத்தில் தங்களுடைய பைக்குகளை வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை ராத்திரியும் அப்படித்தான் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

    சாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம் சாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்

    புகார்

    புகார்

    பக்கத்து பக்கத்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த YAMAHA FXZ TN12L1920 என்ற பைக், YAMAHA FZ5 TN12AA0425 என்ற பைக், இவை இரண்டுமே ஒரே சமயத்தில் திருடுபோய்விட்டது. இதனால் சம்பந்தப்பட்ட இருவரும் உடனடியாக திருமுல்லைவாயல் போலீசில் புகார் தந்தனர்.

    பைக் திருட்டு

    பைக் திருட்டு

    போலீசாரும் விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்தால், மொத்தம் 5 நபர்கள் அந்த தெருவுக்குள் நுழைகிறார்கள். பிறகு வேறு இடத்தில் திருடிய 2 பைக்குகளை கொண்டு வந்து நிறுத்தி, அந்த வண்டியில் ஏதோ செய்யும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 5 பேரில் ஒரு நபர் மட்டும் பைக்கை தள்ளி கொண்டு நகர்கிறார்.

    காஸ்ட்லி பைக்

    காஸ்ட்லி பைக்

    அதாவது ஒவ்வொரு தெருவிலும், ஒரு வாரத்திற்கு முன்பேயே தெரு விளக்குகள் இணைப்பை இவர்கள் துண்டித்து விடுகிறார்கள். அதன்பின்னர்தான், அந்த தெருவிலேயே காஸ்ட்லி பைக்குகளை திருடுவது நடக்கிறது. இதுதான் அயப்பாக்கம் பகுதியில் வழக்கமாக நடப்பதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். குறிப்பாக 1 மணிமுதல் 3 மணிவரை இந்த திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த CCTV யை தாக்கி உடைக்கவும் செய்துள்ளனர்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இவர்களை எல்லாம் போலீசார் விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நைட் நேரத்தில் போலீசார் யாரும் ரோந்து வருவதில்லை என்பதால் அயப்பாக்கம் பகுதிக்கு தனி காவல் நிலையம் வேண்டும் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.

    English summary
    Police are actively searching for 5 people who stole bikes in Ayappakkam near Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X