சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போனை அடித்த அதிமுக மாஜி.. "திமுக வந்துடுங்களேன்".. அந்த பக்கம் கேட்ட குரல்.. விக்கெட் விழுந்துடுச்சே

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் திமுகவில் இணைந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். தனக்கு ஏகப்பட்ட இடங்களில் இருந்து பிரஷர் வருவதால் திமுகவில் ஐக்கியம் ஆகிவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாராம்.

அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் பலர் ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி உள்ளனர். சொத்துகுவிப்பு வழக்கு தொடங்கி டெண்டர் முறைகேடு வழக்குகள் வரை ஏகப்பட்ட வழக்குகள் அதிமுக மாஜிக்கள் மீது இருக்கின்றன.

இந்த வழக்குகளில் நாளுக்கு நாள் பிடி இறுக்கிக்கொண்டு செல்கிறது என்றுதான் கூற வேண்டும். ஒரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் விசாரணை என்று ஏகப்பட்ட விசாரணைகள் அதிமுக மாஜிகளுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளன.

10 அதிரி புதிரி கிளைமேக்ஸ்கள்.. இது மட்டும் நடந்தால்.. அவ்வளவுதான்.. அதிமுக மொத்தமாக மாறும் - பின்னணி 10 அதிரி புதிரி கிளைமேக்ஸ்கள்.. இது மட்டும் நடந்தால்.. அவ்வளவுதான்.. அதிமுக மொத்தமாக மாறும் - பின்னணி

நெருக்கடி

நெருக்கடி

இந்த நெருக்கடிக்கு இடையில் ஒரு மாஜி அமைச்சருக்கு மட்டும் இரண்டு பக்கங்களில் இருந்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்த மாஜி அமைச்சர் மீது டெல்லி ஒரு முக்கியமான வழக்கை போட்டு உள்ளது. அந்த வழக்கில் பிடி இறுகிய நிலையில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவர் மீதான விசாரணையை தீவிரப்படுத்த டெல்லி முயன்று கொண்டு இருக்கிறது. அதிமுகவில் இருப்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்த மாஜிக்கு நெருக்கடி தர டெல்லி நினைக்கிறதாம்.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கும் அவர் மீது உள்ளது. இதில் அவர் வீட்டில் இரண்டு முறை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு அடிப்படையில் வழக்கும் போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கிலும் விரைவில் விசாரணை சூடு பிடிக்கும் என்கிறார்கள். அந்த மாஜி மீது இந்த வழக்குகள் போக வேறு ஒரு மூன்றாவது புகாரும் உள்ளது. அதிலும் விரைவில் போலீஸ் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆக மொத்தம் கால் வைக்கிற இடம் எல்லாம் அவருக்கு கன்னிவெடியாகவே உள்ளதாம்.

 கன்னிவெடி

கன்னிவெடி

இந்த நிலையில்தான் வழக்கில் இருந்து தப்பி அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி சென்ற அவருக்கு பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்கிறார்கள். டெல்லியில் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதால் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை வந்தவர் அதிமுகவினரிடம் இதை பற்றி புலம்பி இருக்கிறாராம். ஆனால் அதிமுகவினரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முக்கியமான திமுக புள்ளி ஒருவருக்கு அவர் போன் செய்து இருக்கிறாராம்.

போன்

போன்

அந்த திமுக புள்ளியை தொடர்பு கொண்டு.. தனது பிரச்னையை சொல்லி இருக்கிறாராம். அதற்கு வேண்டும் என்றால் நீங்கள் திமுக வந்துடுங்களேன் என்று சொல்லி இருக்கிறாராம். இதையடுத்து அந்த மாஜியும் திமுக போனால் என்ன என்று யோசிக்க தொடங்கி உள்ளாராம். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ.. இந்த மாஜி மீது பெரிய ஈர்ப்பு கொண்டவர் இல்லை. அந்த மாஜியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அந்த மாஜி கட்சிக்குள் வருவதையும், வழக்குகள் இருக்கும் ஒருவரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதையும் ஸ்டாலின் விரும்ப மாட்டார் என்கிறார்கள்.

English summary
AIADMK ex minister reportedly in talk with DMK side: May switch party anytime .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X