சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. தமிழகத்தில் 2 நாளில் குறைக்கப்பட்ட சிமெண்ட் விலை.. எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த 2 நாட்களில் ஒரு மூட்டைக்கு 55 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்டுமானப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த ஆட்சி முதலே படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த மார்ச்சில் 420 ரூபாய் ஆக இருந்த சிமெண்ட் 490 ரூபாய் வரை உயர்ந்தது.

 அலறிய இளம்பெண்.. ஆணியாலேயே குத்திய கொடூரம்.. கொடூர கொலையா.. விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..! அலறிய இளம்பெண்.. ஆணியாலேயே குத்திய கொடூரம்.. கொடூர கொலையா.. விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..!

30 ரூபாய் குறைப்பு

30 ரூபாய் குறைப்பு

உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று முன்தினம் 460 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் விலை மேலும் குறைக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் உறுதி அளித்தனர். சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எவ்வளவு குறைப்பு

எவ்வளவு குறைப்பு

இதனிடையே தனியார் தமிழ் ஊடகத்திடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சிமெண்ட் விலையை மேலும் 25 ரூபாயை குறைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சில தனியார் நிறுவனங்கள், கட்டுமான கம்பிகளின் விலையை ஒரு டன்னுக்கு 1180 வரை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

முதலமைச்ர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கட்டுமான பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதன்பலனாக விலை குறைந்து வருவதாகவும் கூறினார்,. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி தெரிவித்தார்.

பாதிக்கப்படக்கூடாது

பாதிக்கப்படக்கூடாது

அரசை பொறுத்தவரை சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப்பொருட்களின் விலையை குறைக்க அதன் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி, நிலைமையை விளக்கி, சாதாரண மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படக்கூடாது என்ற முதலைமைச்சரின் எண்ண்த்தையும் இவர்களுக்கு எடுத்து வைத்து இந்த விலை குறைப்புக்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்' என்றார் அமைச்சர் தென்னரசு.

English summary
Minister Thangam thennarasu said that Cement price cut by Rs 55 in two days in Tamil Nadu. also Reduction in the price of tmt Iron rods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X