சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம்.. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்- மத்திய குழு

Google Oneindia Tamil News

சென்னை : கஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம்ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமானது என மத்திய குழு தெரிவித்துள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசு புணரமைப்பு பணிக்காக முதல் கட்டமாக ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்தது.

Central committee meet CM Edappadi Palanisamy

இந்நிலையில் கஜா புயல் பாதித்த இடங்களில் புணரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.15000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். அப்போது முதல்வர், தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்தனர்.

3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வு இன்று முடிந்துவிட்டது. இதையடுத்து மத்திய குழுவினர் டெல்லி செல்லும் முன்பு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ஆய்வு குறித்து தெரிவித்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும் நிதியுதவி குறித்து தமிழக முதல்வரும் கோரிக்கை விடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் மத்திய குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பர் என தெரிகிறது.

இதுகுறித்து மத்திய குழு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புயல் பாதித்த திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல முடியவில்லை. புயலால் ஏராளமான சேதம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விட்டன. பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் புயல் சேதத்தை பார்வையிட்டனர்.

English summary
Central Committee meet Edappadi Palanisamy after they finished their review in Gaja affected areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X