சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் கூடுதல் தரமான மருத்துவ சேவைகள் தமிழகத்திற்கு கிடைப்பதுடன், தமிழகத்திறக்கு 900 எம்பிபிஸ் சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.

இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போவதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது.

சர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது?!சர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது?!

6 மருத்துவக் கல்லூரி

6 மருத்துவக் கல்லூரி

அதில் 6 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைப்பதாக அறிவித்துள்து. அவை முறையே இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எம்பிபிஎஸ் இடங்கள்

எம்பிபிஎஸ் இடங்கள்

தமிழ்நாட்டில் புதிய அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகத்தில் இப்போது இரு வகைகளில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,600 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து அமைக்கும் 6 கல்லூரிகளில் 900 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

அரசுகள் பங்களிப்பு

அரசுகள் பங்களிப்பு

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் ரூபாய் 325 கோடி மதிப்பில் உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு 195 கோடியும் மாநில அரசு 40 % சதவீதமும் (130 கோடி) பங்களிக்க முடிவு செய்துளளது.

ராமதாஸ் தகவல்

ராமதாஸ் தகவல்

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுடன் இணைந்து அமைக்க உள்ள 6 மருத்துவக்கல்லூரிகள் இல்லாமல், தமிழ்நாட்டில் திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். புதிய கல்லூரிகளுக்கான இடம் தேர்வு, மதிப்பீடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறியிருந்தார்.

English summary
central government approved six new medical colleges on tamilnadu (Ramanathapuram, Virudhunagar, Nilgiris, Tirupur, Dindigul, Namakkal districts)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X