சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து புதிய தகவல் வெளியாகி உளளது. இதன்படி நீட் விலக்கு மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் எனில் நீட் தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தமிழக சட்டசபையில் பிப்வரி 20ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

Central government tell Madras high court, Neet Exemption Bill returned before two years

இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீட் தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்பட 4 பேர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கில் மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜீவ் எஸ் வைத்யா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதி கிடைக்கப் பெற்றதாகவும், அதன்பிறகு அந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறை அனுப்பிவைக்கப்பட்டதாகவும். இதையடுத்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாவை குடியரசுத்தலைவர் நிறுத்தி வைத்தார் என்றும், அதே ஆண்டு செப்டம்பர் 222ம்தேதியே மத்திய அரசு மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Central government tell about Need Exemption Bill on Madras hight court, Neet Exemption Bill returned to tn before two years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X