சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..!

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி.புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை அக்டோபர் 1 முதல் அமல்படுத்த உள்ளது மத்திய அரசு.

இது மட்டுமல்லாமல் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகையும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்படவுள்ளது.

இப்படி நமது அன்றாட வாழ்கையோடு தொடர்புடைய ஒரு சில விதிகளில் அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள் நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..!நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..!

ஆர்.சி.புக்

ஆர்.சி.புக்

மோட்டார் வாகன விதிமுறை 1989-ல் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்து மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்ட உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் ஆர்.சி.புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அப்படி கொண்டுவரப்படும் ஓட்டுநர் உரிமத்தில் கியூ.ஆர்.கோடும் மைக்ரோ சிப்பும் இடம்பெற இருக்கின்றன.

ஒரே அட்டையில் தகவல்

ஒரே அட்டையில் தகவல்

இதன் மூலம் 10 ஆண்டுகள் வரையிலான வாகன ஓட்டுநர் செலுத்திய அபராதத் தொகை மற்றும் தண்டனை அடங்கிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதனிடையே தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் அக்டோபர் 1 முதல் செல்லுமா அல்லது புதுப்பிக்க வேண்டுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

சலுகை கிடையாது

சலுகை கிடையாது

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிலையங்களில் கட்டணம் செலுத்தினால் ஒரு சில சலுகைகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அக்டோபர் 1 முதல் இந்த நடைமுறையிலும் மாற்றம் வர இருக்கிறது. அதன்படி இனி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அதற்கு வழங்கப்பட்டு வந்த தள்ளூபடி/சலுகைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் அதேவேளையில் டெபிட் கார்டுகளுக்கான சலுகைகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி இருப்பு

சராசரி இருப்பு

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் (எஸ்.பி.ஐ. வங்கி) சராசரி மாத இருப்பை குறைக்கும் நடைமுறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல் வீடு, கார், தனிநபர் கடன்களை வெளிவட்டி விகித வரையறைகளுடன் இணைக்கப்படுவதால் இனி விகிதங்கள் குறையும் எனத் தெரிகிறது. மேலும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு பலன் அளிக்கக்கூடிய வகையில் அக்டோபர் 1 முதல் கார்ப்பரேட் வரி குறைப்பு நடைமுறைக்குவர இருக்கிறது.

English summary
Central govt implement New Rules and Regulations on Driving license
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X