சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது டெல்டா மக்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வந்துள்ளது. அதன்படி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது.

நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இரண்டாம் கட்ட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது பெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது

 ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தியா முழுக்க மொத்தம் ஓஎன்ஜிசி சார்பாக 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மீதமுள்ள இடங்களில் 4 நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 என்ன அனுமதி

என்ன அனுமதி

அதன்படி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.கடலூர், நாகையில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 341 கிணறுகள் 40 இடங்களில் அமைக்கப்படும்.

 ஆய்வு பணிகள்

ஆய்வு பணிகள்

இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக ஆய்வு எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. திட்டம் செயலுக்கும் வரும் இடத்தில் ஓஎன்ஜிசி ஆய்வு செய்யும். இதற்காக 41 இடங்களில் ஓஎன்ஜிசி ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

 யார் எல்லாம்

யார் எல்லாம்

ஓஎன்ஜிசி நிறுவனம் வேதாந்தா நிறுவனமும் இதை இணைந்து செய்ய உள்ளது. தமிழகத்தில் நான்கு இடங்களில் முதற்கட்டமாக வேதாந்தா நிறுவனம் கிணறுகள் அமைக்கும். ஓஎன்ஜிசி தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் வேதாந்த நிறுவனம் தனது பணிகளை தொடங்கும்.

 அறிக்கை தாக்கல் செய்யும்

அறிக்கை தாக்கல் செய்யும்

இந்த ஆய்வின் படி டெல்டா மாவட்டங்களில் நிலம் எப்படி இருக்கிறது, அங்கு தண்ணீர் எப்படி உள்ளது, திட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் ஆய்வு செய்யப்படும். பின் அந்த ஆய்வு அறிக்கை மத்திய சுற்றுசூழல் துறைக்கு அளிக்கப்படும்.

English summary
Central Govt's Environment department give permission for Hydrocarbon project in Delta Region in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X