சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் மத்திய குழு- கொரோனா பாதிப்பு குறித்து இன்று ஆய்வு நடத்துகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக மத்திய அரசின் வல்லுநர் குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளது. இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் இக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

மத்திய அரசின் குழு ஏற்கனவே 2 முறை தமிழகம் வருகை தந்தது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

Central team to review Coronavirus situation in Tamil Nadu

தற்போது நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,22,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் 1,700 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தற்போது மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கொரோனா படுதீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வல்லுநர் குழு, கொரோனா பாதிப்பு குறித்து ஆராய 3-வது முறையாக தமிழகத்துக்கு வருகை தந்துள்ளது. இந்த குழுவில் மத்திய அரசில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் இன்று சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவை மத்திய குழு சந்தித்து ஆலோசனை நடத்தும். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு நேரில் சென்று இக்குழு ஆய்வு செய்கின்றனர்.

இதன் பின்னர் சென்னையில் செயல்படும் பரிசோதனை மையங்கள், கிண்டி கிங் நிலையத்தில் உள்ள கொரோனா மருத்துவமனை ஆகியவற்றையும் மத்திய குழு பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளது.

English summary
Central team will review Coronavirus situation in Tamil Nadu on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X