சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னப்பா இது கர்நாடகாவுக்கு எல்லாமே 'படுபாஸ்ட்'..... தமிழகத்துக்கு மட்டும் 'அட்லாஸ்ட்'

Google Oneindia Tamil News

Recommended Video

    Centre ignores Tamilnadu | கர்நாடகாவுக்கு எல்லாமே பாஸ்ட் ! தமிழகத்துக்கு மட்டும் அட்லாஸ்ட்

    சென்னை: தமிழகம் சார்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் படுதாமதமாகத்தான் முடிவுகள் வருகின்றன.. அல்லது இழுபறியாக நீடித்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிற மாநில விவகாரங்கள் சட்டென முடிவுக்கு வருகின்றன.

    கர்நாடகா அரசியல் குழப்பம் உச்சநீதிமன்றத்துக்கு போனது. இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதைபார்க்கும் போது தமிழகம் சார்ந்த விவகாரங்களை டெல்லி இப்படி வேகமாக கையாண்டதே இல்லையே என்கிற ஆதங்கம்தான் எழுகிறது. நீதிமன்றமாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் தமிழகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எப்படி முக்கியத்துவம் தருகின்றன என்பதற்கு ஏகப்பட்ட நிகழ்வுகள் இருக்கின்றன.

    நீட் விவகாரத்தில் பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்க.! அதிமுக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை நீட் விவகாரத்தில் பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்க.! அதிமுக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

    நீட் மசோதா மர்மம்

    நீட் மசோதா மர்மம்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக இதைபற்றி மூச்சுவிடாமல் திடீரென மசோதாவை நிராகரித்துவிட்டோம்.. 2017-லேயே தெரிவித்துவிட்டோம் என்கிறது டெல்லி. 2 ஆண்டுகளாக மவுனிகளாக இருந்தது யார் என்பது புரியாத புதிர்.

    7 தமிழர் விடுதலையில் தாமதம்

    7 தமிழர் விடுதலையில் தாமதம்

    உச்சநீதிமன்றமே பச்சை கொடி காட்டியதால் ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி மாமாங்கம் ஆகியும் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.

    காவிரி பிரச்சனை

    காவிரி பிரச்சனை

    காவிரி நதிநீர் பிரச்சனைக்கு டெல்லியில் நடைபெறும் கூட்டங்களின் முடிவில் தமிழகத்துக்கு இத்தனை டிஎம்சி நீரை உடனே திறக்க வேண்டும் என எத்தனையோ முறை முடிவெடுத்து அறிவித்தாகிவிட்டது. ஆனால் காவிரி நீர்தான் வந்தபாடில்லை.

    11 எம்.எல்.ஏக்கள் வழக்கு

    11 எம்.எல்.ஏக்கள் வழக்கு

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பு வந்து இடைத்தேர்தல் முடிவடைந்து எல்லாமும் சுபமாகிவிட்டது. தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏக்கள் கட்சிகளே மாறிவிட்டனர். ஆனால் சட்டசபையில் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

    English summary
    Social Activists upset over the Delhi's ignorance of Tamilnadu issues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X