நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக சட்டம் நிராகரிப்பு- மத்திய அரசு
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நீட் தேர்வால் மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்டம் 2017-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இச்சட்டம் குறித்து இதுவரை மத்திய அரசு மவுனமாக இருந்து வந்தது. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!