சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லேடீஸ் மேல கை வெச்சதில்லை சார்.. ஆனா ஒரே ஒரு ஆசை.. போலீஸை வியக்க வைத்த புறா கார்த்திக்கின் கோரிக்கை

புறா கார்த்திக் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்

Google Oneindia Tamil News

சென்னை: "லேடீஸ் மேல கை வெச்சதில்லை சார்.. மனிதாபிமானம் உள்ளவன்.. ஜெயிலுக்கு உள்ளே போறது பத்தி எனக்கு கவலை இல்லை.. ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கு.. அதை மட்டும் நிறைவேற்றுங்க" என்று வழிப்பறி கேஸில் கைதான புறா கார்த்திக் போலீசாரிடம் வினோத வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளான்.

சேலம் கருவூலத்தில் கணக்காளராக வேலை பார்ப்பவர் சத்தியவாணி.. 57 வயதாகிறது.. சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 2 மாதமாக தங்கி உள்ளார். போன 18-ந்தேதி சத்தியவாணி மகள் வீட்டு அருகிலேயே வாக்கிங் போய் கொண்டிருந்தார்.. அப்போது டூவீலரில் வந்த ஒரு மர்மநபர், சத்தியவாணி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்படவும், சிறப்பு படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். கொள்ளையன் எந்த பகுதியில் எல்லாம் தப்பி சென்றானோ அந்த பகுதியில் உள்ள 175 சிசிடிவி கேமிராக்கள் கடந்த 15 நாட்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவும் செய்தபிறகுதான் கொள்ளையன் சிக்கினான்.

புறா கார்த்திக்

புறா கார்த்திக்

அந்த திருடன் பெயர் பெயர் கார்த்திக்.. "புறா" கார்த்திக் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாம் இவன்.. வெறும் 28 வயதுதான் ஆகிறது! இவனுக்கு நாய்கள் என்றால் ரொம்பவும் பிரியமாம்.. வகை வகையான நாய்களை வீட்டில் வளர்க்கவும், இதையே சாதகமாக பயன்படுத்தி நம் போலீசார் இவனை பொறி வைத்து பிடித்து கைது செய்துள்ளனர்... மேலும் பல தகவல்களும் இவனை பற்றி வெளிவந்து கொண்டுள்ளன.

கல்யாணம்

கல்யாணம்

படிப்பு வெறும் 9-ம் வகுப்புதானாம்.. கொள்ளையில் ரொம்பவும் ஈடுபாடு வந்துள்ளது.. தாதா காக்கா தோப்பு பாலாஜி டீமில் போய் சேர்ந்து, பிறகு அங்கிருந்து விலகி வந்து தனியாகவே வித்தையை காட்ட தொடங்கி உள்ளார். இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது, ஆனால் மனைவியுடன் இவர் சேர்ந்து வாழவில்லை.. அதனால், ஈரோட்டில் ஜெயலட்சுமி என்பவரை கல்யாணம் செய்து கொண்டு, தனியாக வாழ்ந்து வருகிறார்.. 7 மாசத்தில் ஒரு குழந்தையும் உள்ளது.. சின்ன வயசில் இருந்தே நாய்களை போலவே புறாக்கள் என்றாலும் இவருக்கு ரொம்பவும் பிரியமாம்.

கொள்ளை

கொள்ளை

சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பிடிபட்டுள்ள தொடர்ச்சியாக தங்கச் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த புறா கார்த்திக், தனக்கு ஒரு கடமை பாக்கி இருப்பதாகவும், அதை முடித்துவிட்டு வந்து சிறைக்கு செல்ல தயார் என்றும் கேட்டுள்ளார்.

நாய்கள்

நாய்கள்

இவரது வீடு முழுவதும் ஏகப்பட்ட புறாக்களும், நாய்களும் இருக்கும்.. ஆனால், இவைகளுக்கு சரியான தீனியை தர முடியவில்லை.. அதற்கு போதுமான பணம் இல்லை.. ஒரு நாளைக்கு 50 கிலோவுக்கு இறைச்சி வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. சாப்பாடு இல்லாமல் அந்த புறாக்களும், நாய்களும் இவர் கண் முன்னாடியே இறந்துள்ளன.. இதை பார்த்து பதறி போய்விட்டார் புறா கார்த்திக்.

ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி

அப்போதுதான் திருடியாவது இந்த நாய்களுக்கும், புறாக்களுக்கும் சாப்பாடு தர வேண்டும் என்று முடிவெடுத்தார்.. கூடவே வாழ்ந்து வரும் ஜெயலட்சுமிக்கு தெரியாமல் சென்னை வந்துவிடுவார்.. ஒன் டே டியூட்டிதான்.. காலையில் "கை"வைத்தால் ராத்திரிக்குள் அதை விற்று பணமாக்கி.. அதில் தீனி வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்து விடுவார்.

பெண்கள்

பெண்கள்

இதையெல்லாம் கேட்டு போலீசார் மலைத்து போயினர்.. "ஸார்.. சென்னை வந்ததுமே ஒரு பைக்கை திருடிடுவேன்.. லேடீஸ் கூட்டமாக இருக்கும் இடத்துக்குதான் போவேன்.. ஆனால் எந்த லேடீஸ் மீதும் கை வைக்க மாட்டேன்.. நாய், புறா மீது எனக்கு அவ்வளவு பாசம் இருக்கும்போது, எப்படி பெண்களை துன்புறுத்தி நகையை பறிப்பேன்.. நைசா பேச்சு தருவேன்.. குறைந்தது 2 மணி நேரமாவது பேசுவேன்.. என்னை அவங்களும் முழுசா நம்ப ஆரம்பிச்சவுடன்.. அவங்களுக்கே வலிக்காமல் செயினை அறுத்துட்டு வந்துடுவேன்" என்கிறார்.

வீக்னஸ்

வீக்னஸ்

ஒவ்வொரு முறையும் ஹெல்மட் போட்டுட்டுதான் வழிப்பறி செய்வேன்.. அதனால நான் மாட்டிக்காம இருந்தேன்.. இப்போ என் "நாய் வீக்னஸை" வைத்து பிடிச்சிட்டாங்க.. ஸார்.. எனக்கு ஜெயிலுக்கு வர்றதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. ஆனா ஒரே ஒரு ஆசை இருக்கு.. கடைசியா ஒருமுறை என் நாய்களையும் புறாக்களையும் பார்க்கணும்.. அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க" என்றதுமே போலீசார் மலைத்து போய் நின்றனராம்!

English summary
Chain Snatcher pura karthick arrested by 175 CCTV Footage in chennai and he confessed to police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X