சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடாது தொடரும்.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை மற்றும் குளிர் நிலவி வருகிறது. கர்நாடகாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

4 மாவட்டங்கள்

4 மாவட்டங்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று கணித்துள்ளோம்.

மழை அளவு

மழை அளவு

தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மற்றும் பந்தலூரில் தலா 11, சின்னக்கல்லார், மைலாடி, ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் வெப்பம்

பெங்களூர் வெப்பம்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பெங்களூரில் 2016ம் ஆண்டு டிசம்பர் வர்தா புயல் காலத்திற்கு பிறகு மிக குறைந்த பகல் நேர வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

கடும் குளிர்

கடும் குளிர்

பெங்களூர் நிலை இப்படி என்றால், ஊட்டி பற்றி சொல்ல வேண்டாம். குளிரில் உறைந்து போயுள்ளது ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகள். குளிரின் தாக்கம், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கூட எதிரொலிக்கிறது.

English summary
The Chennai Meteorological Department has forecast heavy rains in 4 districts in Tamil Nadu. According to the Chennai Meteorological Center, There is a possibility of heavy rain in 4 districts in Tamil Nadu. Nilgiris, Coimbatore, Theni and Dindigul districts are likely to receive heavy rains. Karaikal is likely to receive moderate rainfall over the south-eastern and adjoining districts of the Western Ghats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X