சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மணிகண்டனிடம் இருந்து ரூ 10 கோடி நஷ்டஈடு.. மாதம் ரூ 2 லட்சம் பராமரிப்புத் தொகை கேட்கும் சாந்தினி

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி மனுதாக்கல் செய்துள்ளார்.

நாடோடிகள் படத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி. மலேசியரான இவர் அந்நாட்டு சுற்றுலா துறையின் அதிகாரியாகவும் உள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகை பலாத்காரம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா? நடிகை பலாத்காரம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

தனி வாழ்க்கை

தனி வாழ்க்கை

இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மணிகண்டனால் தான் 3 முறை கர்ப்பம் தரித்ததாகவும் அதை மணிகண்டன் வலுக்கட்டாயமாக கலைக்க கூறியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மணிகண்டன் திருமணம்

மணிகண்டன் திருமணம்

மணிகண்டன் தன்னை திருமணம் செய்ய கோரியபோது ஆட்களை வைத்து மிரட்டியதாகவும் சாந்தினி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஜூலை 7ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

சைதாப்பேட்டை நீதிமன்றம்

சைதாப்பேட்டை நீதிமன்றம்

இந்த நிலையில் சைதாப்பேட்டை பெருநகர 9ஆவது கோர்ட்டில் சாந்தினி தரப்பில் நஷ்டஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

மோசடி செய்த மணிகண்டன்

மோசடி செய்த மணிகண்டன்

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

English summary
Chandini files plea asking Rs 10 crore compensation from AIADMK Ex Minister Manikandan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X