சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிரங்கும்.. இஸ்ரோ தகவல்- வீடியோ

    சென்னை: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

    நாடு முழுவதுமிருந்து 108 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக சிவன் தகவல் தெரிவித்துள்ளார். யுவிகா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 2 வாரம் இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    Chandraayan 2 goes to the south pole of the moon.. ISRO leader said proudly

    யுவிகா மூலம் திறனுடைய மற்றும் தேடல் உள்ள மாணவர்களை இந்தியா முழுவதும் தேடி பிடித்து, அவர்களை இஸ்ரோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர்களிடம் விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதாக கூறினார்.

    மேலும் வரும் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் , ஆர்.எஸ்.ஆர் 2பி என்கிற செயற்கை கோள் நிலைப்பட உள்ளது என்றார். சந்திராயன்-2 செயற்கைகோளானது வரும் ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்.

    செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கும். யாருமே இதுவரை செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு சென்று தரையிறங்க உள்ள சந்திராயன் - 2 விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடும் என்றார்.

    இதுவரை யாருமே ஆராயாத இடமாக இருப்பதால் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சந்திராயன்-1 நிலவில் நீர் உள்ளதாக கூறியது. அது போல சந்திராயன் 2 பல புதிய தகவல்களை நமக்கு தரும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்

    ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

    சந்திராயன்-2 விண்கலத்தைத் தொடர்ந்து, அடுத்த முயற்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 என்ற விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சிவன் தெரிவித்தார். இதற்கு மிஷன் ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    விண்ணில் மிதக்கும் விண்வெளி குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு பல்வேறு வழிகளை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் தெரிவித்தார்.

    English summary
    ISRO chief Sivan has said that the growth in science and technology is the real growth of the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X