சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டியர் இஸ்ரோ.. அந்த செல்லத்தை உடனே வேலைக்கு எடுங்க.. ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சண்முக சுப்ரமணியன்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியனுக்கு இஸ்ரோ வேலை கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    How did Shanmuka Subaramanyam help NASA

    சென்னை: விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியனுக்கு இஸ்ரோ வேலை கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

    விக்ரம் லேண்டர், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இந்தியா முழுக்க இது பற்றித்தான் பேச்சாக இருந்தது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் நிலவிற்கு அருகில் 2 கிமீ தூரத்தில் இருக்கும் போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.

    ஓய்வு நேரத்தில் ஓவர் டைம்.. லோ பிக்சல் போட்டோவை வைத்தே கலக்கிய சுப்ரமணியன்.. வியந்து போன நாசா!ஓய்வு நேரத்தில் ஓவர் டைம்.. லோ பிக்சல் போட்டோவை வைத்தே கலக்கிய சுப்ரமணியன்.. வியந்து போன நாசா!

    வேலை

    இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க சென்னையை சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் பெரிய அளவில் வைரலாகி உள்ளார். இவருக்கு தற்போது இணையத்தில் பலர் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். நாசாவுக்கே ஐடியா கொடுத்த தமிழர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

    மீடியாக்கள்

    மீடியாக்கள்

    அதேபோல் மீடியாக்களும் இவரை தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறது. காலையில் இவர் டிவிட் போட்ட நொடியில் இருந்து ஆங்கில மீடியாக்கள், வட இந்திய மீடியாக்கள், தமிழ் மீடியாக்கள் எல்லாம் இவரை வரிசையாக பேட்டி எடுத்துள்ளது. சில அமெரிக்கா செய்தி நிறுவனங்களும் இவர் பேட்டி கண்டு இருக்கிறது.

    விஞ்ஞானிகள் எப்படி

    அதேபோல் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள், அறிவியல் ஆய்வாளர்கள் சிலரும் இவரை டிவிட்டரில் பாராட்டி உள்ளனர். சில ஆராய்ச்சியாளர்கள், அட இவர் எப்படி ஓய்வு நேரத்தில் ஆராய்ச்சி செய்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தார் என்று ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

    வேலை தர வேண்டும்

    வேலை தர வேண்டும்

    இந்த நிலையில் இன்னும் சிலர் இவருக்கு நாசா வேலை கொடுக்க வேண்டும். இஸ்ரோ இவரை அழைத்து பாராட்டி வேலை தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினியராக இருக்கிறார்.

    English summary
    Chandrayaan 2: Dear Isro, Give Him a Job, People asking behalf of Shanmuka Subaramanyam in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X