சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாசாவிற்கு மெயில் செய்தேன்.. பதில் அனுப்பினார்கள்.. எல்லாம் மாறியது.. சண்முக சுப்ரமணியன் விளக்கம்!

விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசாவிற்கு மெயில் அனுப்பியதும் அவர்கள் உடனே எனக்கு நல்ல முறையில் பதில் அளித்து பேசினார்கள் என்று சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    How did Shanmuka Subaramanyam help NASA

    சென்னை: விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசாவிற்கு மெயில் அனுப்பியதும் அவர்கள் உடனே எனக்கு நல்ல முறையில் பதில் அளித்து பேசினார்கள் என்று சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    கடைசியில் ஒரு வழியாக விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் தென் துருவத்தில் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து ஒரு கிமீ தூரம் தள்ளி, விக்ரம் லேண்டர் விழுந்துள்ளது. இதில் மொத்தமாக விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி உள்ளது.

    இதற்கான புகைப்பட ஆதாரங்களை நாசா வெளியிட்டுள்ளது. தமிழர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த ஐடியா மூலம்தான் நாசா இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியது.

    உலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகைஉலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகை

    பேட்டி அளித்தேன்

    பேட்டி அளித்தேன்

    இது தொடர்பாக சண்முக சுப்ரமணியன் அளித்த பேட்டியில், சந்திரயான் 2 தொடர்பாக நான் தொடர்ந்து டிவிட் செய்து வந்தேன். விக்ரம் லேண்டர் குறித்து எனக்கு தெரிந்த விஷயங்களை டிவிட் செய்து வந்தேன். நாசா இஸ்ரோ இரண்டிற்கும் நான் இது தொடர்பாக நிறைய டிவிட்களை செய்து இருக்கிறேன்.

    நிறைய புகைப்படம்

    நிறைய புகைப்படம்

    அதோடு நிறைய புகைப்பட ஆதாரங்களையும் அவர்களுக்கு இதனால் அனுப்பினேன். எனக்கு தெரிந்த நாசா விஞ்ஞானிகள் சிலருக்கு இதற்காக மெயில் அனுப்பினேன். LRO (Lunar Reconnaissance Orbiter) அணியில் சிலரின் மெயிலை சேகரித்து அவர்களுக்கு அனுப்பினேன்.

    என்னிடம் பேசினார்கள்

    இதன் மூலம் LRO (Lunar Reconnaissance Orbiter) இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர். அவர்கள் என்னை இமெயில் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்கள். எனக்கு உடனே அவர்கள் பதில் அளித்து பேசியது சந்தோசம் அளித்தது.

    ஒரு பகுதி மட்டும்

    ஒரு பகுதி மட்டும்

    நிலவில் ஒரு பகுதியில் மட்டும் இயல்பிற்கு மாற்றமாக இருந்தது. இது புகைப்படத்தில் நன்றாக தெரிந்தது. அதை எடுத்துக்காட்டி அவர்களுக்கு விளக்கி இருந்தேன்.தற்போது அதன் மூலம் பெரிய திருப்பங்கள் நிகழ்ந்து உள்ளது சந்தோசம் அளிக்கிறது, என்று சண்முக சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Chandrayaan 2: Nasa responds to me very well about Vikram Lander says Shanmuka Subramanyam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X