சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க உள்ளது என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

Chandrayaan 2 on course to land on the lunar south polar region on 7th September

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 நிலவில் தரையிறங்க உள்ளது என்று டுவிட்டரில் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை சிறப்பாக பயணம் நடந்துகொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 தரையிறங்க உள்ளது. இது பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து, சந்திரயான் - 2 விண்கலம் கடந்த 14ம் தேதி பிரிந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது. முன்னதாக, நிலவை அடைவதற்கான அதன் உயரம், ஐந்து முறை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hello! This is Chandrayaan 2 with a special update. I wanted to let everyone back home know that it has been an amazing journey for me so far and I am on course to land on the lunar south polar region on 7th September. To know where I am and what I'm doing, stay tuned!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X