சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திரயான் 2.. பிரக்யான் ரோவருக்கு எதுவும் ஆகவில்லை..லேண்டரை கண்டுபிடித்த சென்னை விஞ்ஞானி புது தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் மோதிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர் சண்முக சுப்ரமணியன் தற்போது சந்திரயான் 2 குறித்த புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார். விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி, உடையாமல், எந்த பாதிப்பும் அடையாமல் இருந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Recommended Video

    Chandrayan 2 : ISRO- க்கு மீண்டும் உதவும் தமிழன்

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

    செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கும் போது நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. அதன்பின் இதை தொடர்பு கொள்ள முடியாமல் இஸ்ரோ சிரமப்பட்டது.

    சந்திரயான், ககன்யான் திட்டங்கள் பெரிய விஷயம் என பாராட்டிய டொனால்ட் டிரம்ப் சந்திரயான், ககன்யான் திட்டங்கள் பெரிய விஷயம் என பாராட்டிய டொனால்ட் டிரம்ப்

    தொடர்ந்து தேடியது

    தொடர்ந்து தேடியது

    நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடிக்கப்ட்டது. சென்னையை சேர்ந்த விஞ்ஞானி சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர் கொடுத்த க்ளூ மூலம் நாசா இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது.

    தமிழர் கண்டுபிடித்தார்

    தமிழர் கண்டுபிடித்தார்

    நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை வைத்து இவர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அந்த புகைபடத்தில் விக்ரம் லேண்டர் தென்படுவதாக இவர் குறிப்பிட்டு இருந்தார். Line 3531 மற்றும் Sample 22670 பகுதியில் விக்ரம் லேண்டர் இருப்பதை இவர்தான் கண்டுபிடித்து நாசாவிற்கு தெரிவித்தார். இவர் தெரிவித்த க்ளூ மூலம் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நாசாவும் இவருக்கு நன்றி தெரிவித்து இருந்தது.

    புதிய தகவல்

    புதிய தகவல்

    இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் அதற்கு உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் இரண்டும் குறித்து சண்முக சுப்ரமணியன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி, உடையாமல், எந்த பாதிப்பு அடையாமல் இருந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர் நிறைய டிவிட்களை செய்துள்ளார்.

    என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட்டில், நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 2ன் பிரக்யான் ரோவர் உடையாமல்,எதுவும் ஆகாமல் அப்படியே இருந்திருக்கலாம். பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி சில மீட்டர்கள் சென்று இருக்கலாம். வேகமாக மோதியதால் விக்ரம் லேண்டரின் சில பாகங்கள் மட்டுமே உடைந்து அருகில் சிதறி இருக்கலாம், என்று கூறியுள்ளார்.

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    மேலும்,

    1. நான் முன்பு கண்டுபிடித்த உடைந்து போன சாதனங்கள் விக்ரம் லேண்டருக்கு சொந்தமானது.

    2. நாசா கண்டுபிடித்த உடைந்து போன சாதனங்கள் மற்ற பே - லோடில் இருந்து வந்ததாக இருக்கலாம்.ஆன்டெனா, எஞ்சின், சோலார் பேனல் போன்றவற்றில் இருந்து வந்து இருக்கலாம்.

    3. ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி சில மீட்டர்கள் நகரத்து சென்று உள்ளது, என்றுள்ளார்.

    வெளிச்சம் இல்லை

    வெளிச்சம் இல்லை

    மேலும், நிலவின் தென் பகுதி வெளிச்சமானது இல்லை. அதோடு விக்ரம் லேண்டர் 2 மீட்டர் ஆழத்தில் இருந்தது. அதனால் இதை சரியாக பார்க்க முடியவில்லை. நவம்பர் 11ம் தேதி நாசா வெளியிட்ட புகைப்படங்கள் வேறு ஆங்கிளில் எடுக்கப்பட்டது. அதில் சரியாக சூரிய ஒளி தென்படவில்லை. இதனால் விக்ரம் லேண்டர் குறித்தும், ரோவர் குறித்தும் சரியாக அதில் தெரியவில்லை.

    சிக்னல் வந்து இருக்கும்

    சிக்னல் வந்து இருக்கும்

    அங்கு சரியாக சூரிய ஒளி படவில்லை. இதனால் இதை பார்ப்பது மிகவும் கடினம். இந்த புகைப்படம் கடந்த ஜனவரி 4ம் தேதி 2020ல் எடுக்கப்பட்டது. பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி சில மீட்டர் சென்று இருக்கலாம். இஸ்ரோ அனுப்பிய சிக்னல் லேண்டர் மூலம் ரோவருக்கு சென்று இருக்கும். ஆனால் லேண்டர் இதற்கான பதிலை பூமிக்கு அனுப்ப முடியாமல் போய் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    என்ன சுருக்கம்

    என்ன சுருக்கம்

    இது தொடர்பாக அவர் பின்வரும் தகவல்களை/ சந்தேகங்களை தெரிவித்துள்ளார்.

    1. விக்ரம் லேண்டர் வேகமாக இறங்கி உடைந்து இருக்கும். ஆனால் ரோவர் அதில் இருந்து வெளியேறி சில மீட்டர் தூரம் நகர்ந்து சென்று இருக்கும்.

    2. ரோவர் உடைந்து இருக்காது.

    3.நாம் புகைப்படத்தில் பார்த்தும் உடைந்த சாதனங்கள், ரோவரின் பாகங்கள் இல்லை. மாறாக அது லேண்டரின் பாகங்கள்.ரோவர் எதுவும் ஆகாமல் அப்படியே இருந்திருக்கலாம். குறைவான சூரிய ஒளியால் இதை புகைப்படத்தில் பார்க்க முடியவில்லை.

    4. இஸ்ரோ அனுப்பிய சிக்னலை விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவருக்கு அனுப்பி , ரோவர் பதில் சிக்னலை லேண்டர் மூலமாக திருப்பி அனுப்பி இருக்கும். ஆனால் அது இஸ்ரோவிற்கு கிடைத்து இருக்காது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சண்முக சுப்ரமணியன் தற்போது எழுப்பி இருக்கும் சந்தேகங்களை இஸ்ரோ விரைவில் விசாரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Chandrayaan 2: Pragyan rover might be intact on moon surface says techie Shanmuka Subaramanyam who helped NASA to find Vikram Lander.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X