சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவு வட்டப்பாதையின் 3வது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது சந்திரயான்-2

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2 மிக மிக சவாலான காரியம் ..! மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

    சென்னை: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட, சந்திரயான்-2 விண்கலம், நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைந்துள்ளது. இது குறித்து இஸ்ரோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 நிலவில் தரையிறங்க உள்ளது.

    Chandrayaan-2s third lunar bound orbit manoeuvre performed successfully

    இந்த நிலையில், இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது.

    மொத்தம் 4 கட்டம் உள்ளது. அதில், 3வது கட்டத்தை சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக எட்டி உள்ளது. இன்று காலை சரியாக, 9.04 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைந்துள்ளது.

    சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையில் 3 வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 11 நாளில் சந்திரயான்-2ல் உள்ள லேண்டர் நிலவில் தரையிறங்கும்.

    English summary
    The telemetry, tracking and command network of the Indian space agency (ISTRAC) performed the third lunar-bound orbit manoeuvre for Chandrayaan-2 spacecraft, the agency said on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X