சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.

சச்சின் பைலட் கோஷ்டி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் பிறப்பித்த தடை தொடரும்- உச்சநீதிமன்றம்சச்சின் பைலட் கோஷ்டி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் பிறப்பித்த தடை தொடரும்- உச்சநீதிமன்றம்

 பத்திரப்பதிவு

பத்திரப்பதிவு

இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 சோதனை அடிப்படை

சோதனை அடிப்படை

சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

 உடனே பத்திரம் ஆகும்

உடனே பத்திரம் ஆகும்

சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை என்றார்.

 விரிவான அறிவிப்பு

விரிவான அறிவிப்பு

இதனிடையே பழைய பத்திரங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என கூறப்படுகிறது. புதிய பத்திரங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 1ம்தேதி நடைமுறைக்கு வரும் போது அந்தந்த பத்திர அலுவலங்களில் விரிவான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

English summary
change of patta in Tamil Nadu after land registration from 1st August
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X