சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப். 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்! தண்டனை, அபராதம் பல மடங்கு அதிகம்

Google Oneindia Tamil News

சென்னை: மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, அதில் பெரும்பாலானவை செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Changes in Motor Vehicle Act will come into effect from September 1

எனவே, இனிமேல், ரொம்பவே உஷாராக வாகனங்களை இயக்க வேண்டியது கட்டாயம். விபத்துகளை குறைக்க, இதுபோன்ற நடவடிக்கை உதவுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதோ, எந்தெந்த விதிமுறை மீறல்களுக்கு எந்தெந்த மாதிரி தண்டனை என்பது குறித்த முழு விவரம் உள்ளது. பார்த்துக்கொள்ளவும்:

1. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராதம் ரூ .200 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. உரிமம் இல்லாமல் வாகனம் பயன்படுத்தினால் ரூ .5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

3. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ரூ .500 ஆக இருந்த அபராதம் இனி ரூ .5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்

4. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், லகுரக மோட்டார் வாகன ஓட்டுநர்களாக இருந்தால் ரூ .1,000 வரையும், நடுத்தர பயணிகள் அல்லது பொருட்கள் வாகனங்களுக்கு ரூ .4,000 வரை வசூலிக்கப்படும்.

5. அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான தண்டனையாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ .10,000 வரை அபராதம் விதிக்க முடியுமாம்.

6. வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்களுக்கு முதல் முறை ரூ .1000 வரையிலும், இரண்டாவது முறை என்றால், ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

7. விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் / 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

9. காப்பீடு இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ .1,000 மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ .2,000 அபராதம் விதிக்கப்படும். இண்டாவது முறை இதே குற்றம் செய்தால் அபராதம் ரூ .4,000 மற்றும் / அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

10. சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறார் 25 வயது ஆகும்வரை, எல்.எல். கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

11. லேனர் லைசென்ஸ் விண்ணப்பதாரர்கள் மாநிலத்தில் உள்ள எந்தவொரு உரிம அதிகாரத்திற்கும் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்பட்டது.

12. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், உரிமம், காலாவதியாகும் ஒரு வருடம் முன்போ, காலாவதியாகி ஒரு வருடத்திற்கு உள்ளோ எந்த நேரத்திலும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து புதுப்பிக்க விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர் மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

English summary
Changes in Motor Vehicle Act: Starting September 1, the new rules of Motor Vehicle Act will come into effect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X