சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை விவகாரம்.. ஆண் கழிவறையில் பெண் உட்காருவது போல.. சாருஹாசன் கருத்து

சபரிமலை விவகாரம் குறித்து நடிகர் சாருஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "சபரிமலை விவகாரத்தில் பெண்கள் உரிமை கோருவது, ஆண் கழிவறையில் பெண் உட்காருவது போல" என்று நடிகர் சாருஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கருத்துக்கள் வெளிவந்துள்ளன. கடைசியில் இந்த விவகாரம் கலவர சூழல் உருவாகும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்தியது. இதுகுறித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Charuhasans Shocking Comment on Sabarimala

அதன்படி, நடிகரும், கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் இதுசம்பந்தமாக அதிர்ச்சிகரமான ஒரு கருத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

Charuhasans Shocking Comment on Sabarimala

4 லட்சம் டன் இரும்பு.. 55 கிமீ நீளம்.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை! 4 லட்சம் டன் இரும்பு.. 55 கிமீ நீளம்.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை!

"ஒரு தவறான சமத்துவம்..... சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம்.. பெண்கள் ஆண்களின் பொது கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்.!!!" என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
Charuhasan's Shocking Comment on Sabarimala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X