சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புறநகரில் இடைவிடாமல் கனமழை! செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக நேற்று முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 24 கொள்ளளவு உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியுள்ளது.

Recommended Video

    நிவர் புயல்: முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி - வீடியோ

    ஆனாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரத்து அதிகரிக்கும் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யாததால் ஏரிக்கு நீரானது குறைவாக வந்தது.. இதனால் முழு கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்!சென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்!

    அதிகாரிகள் தகவல்

    அதிகாரிகள் தகவல்

    தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 22 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 3248 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1547 கனஅடியாக உள்ளது. இதனிடையே மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தால் விரைவில் முமு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அடையாறு ஆற்றில் சுமார் 5000 கனஅடி நீர் செல்கிறது.

    1500 கனஅடி நீர்

    1500 கனஅடி நீர்

    செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். 22 அடியை எட்டியுவுடன் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி ஏரிக்கு நீர் வரத்து உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. . படிப்படியாக ஏரிக்கு வரும் உபரி நீர் அதிகமாக வெளியற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    50 ஆயிரம் கனஅடி

    50 ஆயிரம் கனஅடி

    2015ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. எனினும் அச்சப்படும் அளவிற்கு நிலைமை இப்போது இல்லை என்றும், அடையாற்றில் 50 ஆயிரம் கனஅடி நீரை வெளியற்றும் அளவுக்கு பலமாக கரைகள் உள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாதுகாப்பாக இருங்கள்

    பாதுகாப்பாக இருங்கள்

    இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    chembarambakkam lake may touch full capacity today due to heavy rain in kachipuram district. chennai already flooded for heavy rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X