சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைப்பு- வினாடிக்கு 7,000 கன அடிநீர் திறப்பு

Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றில் வினாடிக்கு 9,000 கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 2,000 கன அடிநீர் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 7,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Recommended Video

    நிவர் புயல்: முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி - வீடியோ

    ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்றும், ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

    நீர் திறப்பு குறைப்பு

    நீர் திறப்பு குறைப்பு

    ஏற்கனவே சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டி உள்ளது. இதன் காரணமாக இன்று மதியம் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் முதலில் திறக்கப்பட்டது. அதன்பிறகு 1500 கன அடியாக உயர்ந்தது. பின்னர் 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 5,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. இரவில் 7,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9.000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. பின் நள்ளிரவில் இந்த நீர் திறப்பு குறைக்கப்பட்டது. வினாடிக்கு 7,000 கன அடிநீர் திற்ந்துவிடப்பட்டது.

    நீர் அப்படியே வெளியேற்றப்படும்

    நீர் அப்படியே வெளியேற்றப்படும்

    இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 ஆக உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது ஏரி இன்று நிரம்பிய உடன் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீர் அப்படியே வெளியேற்றப்படும்

    நீர் அப்படியே வெளியேற்றப்படும்

    இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடி,
    மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 ஆக உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது ஏரி இன்று நிரம்பிய உடன் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்

    பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்

    இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கையில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    பொதுப்பணித்துறை ஆய்வு

    பொதுப்பணித்துறை ஆய்வு

    செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நீர் அதிக அளவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீர்திறப்பு அதிகரித்தாலும் அச்சப்படும் அளவுக்கு நிலைமை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    English summary
    chembarambakkam lake open today due to heavy rain in kachipuram district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X