சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2015ல் சென்னை வெள்ளத்தில் மிதந்ததே.. அதற்கு பிறகு முதல் முறை.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு 22 அடி எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது - வீடியோ

    முன்னதாக, வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை ஓட்டிய போது, திடீரென குறுகிய முன் அறிவிப்புடன் ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானதே அப்போது தெரியாது.

    சும்மா சுற்றித் திரிந்த நாயை ஏரியில் தூக்கி எறிந்து வாயில்லா ஜீவனை வதைத்த கொடூரர்கள்! சும்மா சுற்றித் திரிந்த நாயை ஏரியில் தூக்கி எறிந்து வாயில்லா ஜீவனை வதைத்த கொடூரர்கள்!

    இரவோடு திறப்பு

    இரவோடு திறப்பு

    இரவோடு இரவாக நீர் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அப்போது 30 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நகருக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலங்கள் வழங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக போனது.

    5 வருடங்கள் பிறகு

    5 வருடங்கள் பிறகு

    இந்த சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு இப்போதுதான் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதேநேரம் இம்முறை உரிய முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஆயிரம் கன அடி

    ஆயிரம் கன அடி

    ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது, என்ற போதிலும் பொதுமக்கள் ஒரு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம்

    24 அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. 22 அடி நிரம்பியதும் அது திறக்கப்படுவது வழக்கம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chembarambakkam Lake water will be release from today after five years, says public welfare department sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X