சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டர் வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளவை எட்டும் நிலை உள்ளது. அத்துடன் நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

chembarambakkam Reservoir released : Kanchipuram Collector advise to people to be safe

எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஏரி நிறைந்தால் அதற்கு மேல் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

chembarambakkam Reservoir released : Kanchipuram Collector advise to people to be safe

இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடியாக இருந்தது.
மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடியாகும் ஏரிக்கு நீர்வரத்து 4027 என்கிற அளவில் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏரி இன்று நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிறைந்த பின்னர் வரும் நீர் வெளியேற்றப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அந்த அளவிற்கு வடிகால் வசதிகள் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

chembarambakkam Reservoir released : Kanchipuram Collector advise to people to be safe

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கையில், இன்று(25.11.2020) மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. எனவே காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

English summary
According to a statement issued by Kanchipuram District Collector Maheshwari Ravikumar, 1,000 cubic feet of water will be released from the chembarambakkam Reservoir at 12 noon today (25.11.2020). Hence Kavalur, Kundrathur. Natham, Thirumudivakkam Thiruneermalai public living in low lying areas to be safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X