சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் இனி.. எம்ஜிஆர் ரயில்நிலையம்.. பிரதமர் மோடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரயில்நிலையம் என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளையும் இணைத்து சென்னையை அடுத்த வண்டலூர் அருகே பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். அதற்காக சென்னை விமான நிலையத்துக்கு மாலை 3.30 மணிக்கு வந்து.. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்றார்.

தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை! தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!

பங்கேற்பு

பங்கேற்பு

பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேசிய மோடி

பேசிய மோடி

லோக்சபா பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:காஞ்சி மண்ணுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் மகத்தானவர்கள்

தமிழர்கள் மகத்தானவர்கள்

இப்போது காசியின் எம்பியான நான் இங்கு வந்திருக்கிறேன். தமிழ் மொழி இனிமையானது... பழமையானது. தமிழகமும், தமிழக மக்களும் மகத்தானவர்கள்.

தமிழக முன்னேற்றம்

தமிழக முன்னேற்றம்

தமிழகத்தை வளப்படுத்தவே வந்திருக்கிறோம். தமிழக முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட வளமான தமிழகத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

எம்ஜிஆர் திட்டங்கள்

எம்ஜிஆர் திட்டங்கள்

எம்ஜிஆர் ஏழை மக்களுக்காக பாடுபட்டவர். அவரது சமூக நலத்திட்டங்களை ஏழைகளின் நலன்களுக்கானது. தேசிய நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களை நாங்கள் துவக்கி உள்ளோம்.

தமிழகத்தின் அடையாளம்

தமிழகத்தின் அடையாளம்

அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் சாலைகளை அமைக்க போகிறோம். எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்தான் மண்ணின் மைந்தன். தமிழக மக்களின் அடையாளமாக இருந்தவர் எம்ஜிஆர்.

ரயில்நிலையம் பெயர்மாற்றம்

ரயில்நிலையம் பெயர்மாற்றம்

உங்களுக்கு 2 விஷயங்களை அறிவிக்கிறேன். ஒன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரயில்நிலையம் என்று அழைக்கப்படும். மற்றொரு ஒன்றையும் இப்போது கூறுகிறேன்.

தமிழ் மொழி

தமிழ் மொழி

தமிழகத்தில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் வரும் விமானங்களில் இனி தமிழில் அறிவிப்பு வெளியாகும். சில ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்றேன்.

14000 வீடுகள்

14000 வீடுகள்

இலங்கையில் தமிழர்கள் இருக்கும் இடத்தில் பல நலத்திட்டங்களை செய்துள்ளேன். அங்கு தமிழர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டு இருக்கிறது.14,000 வீடுகள் கட்டித்தர முடிவு செய்துள்ளோம்.

1900 மீனவர்கள்

1900 மீனவர்கள்

தமிழர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்தவர்களை நாம் மீட்டிருக்கிறோம். இலங்கையில் இருந்து 1900 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்படும்

சவூதி அரசுடன் பேசி 850க்கும் மேற்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

English summary
Chennai Central railway station will call as MGR railway station modi announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X