சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு தனிமாவட்டமாகிறது.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளது.

முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்து காணப்பட்டதால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்பட துவங்கியதாக கூறப்படுகிறது.

Chengalpattu becomes a separate district again.. Tamilnadu Government Announced

மேலும் செங்கல்பட்டு விஜயநகரப் பேரரசின் தலைநகராக குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து செங்கல்பட்டு சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 1859-ல் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள சைதாபேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள செங்கல்பட்டில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று செல்லும்.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை தனியாகப் பிரித்து மாவட்டமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு ஒரு நகராட்சி ஆகும். சென்னையின் புறநகர் பகுதியில் ஒன்றாக செங்கல்பட்டு இருக்கிறது.

முன்பு செங்கல்பட்டு, எம்ஜிஆர் மாவட்டம் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த எம்ஜிஆர் மாவட்டத்திற்குள் காஞ்சிபுரம் சேர்க்கப்பட்டது. பின்னர் தலைவர்களின் பெயரை மாவட்டங்களுக்கு வைக்க கூடாது.

ஊழியர்கள் நல்லா இருந்தா தான் தொழிலில் வளர்ச்சி காட்ட முடியும்.. சரவணபவன் ராஜகோபாலின் பாலிசி ஊழியர்கள் நல்லா இருந்தா தான் தொழிலில் வளர்ச்சி காட்ட முடியும்.. சரவணபவன் ராஜகோபாலின் பாலிசி

இவ்வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு நகரங்களை உள்ளடக்கிய எம்ஜிஆர் மாவட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பல்லாண்டுகளாக செங்கல்பட்டானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய நகரமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 33 மாவட்டங்கள் இருந்தன. இந்நிலையில காஞ்சிபுரத்திலிருந்து தனியாக பிரித்து செங்கல்பட்டை மாவட்டமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

English summary
Chief Minister Palanisamy has announced that two more new districts will be created in Tamil Nadu. Subsequently, Chengalpattu is to be created as a separate district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X