சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நீங்கள் செல்லலாம்,உங்களை கமிஷனர் ஆஜர்படுத்துவார்..' இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜிஸ்ட்ரேட்

Google Oneindia Tamil News

சென்னை: கொலை விசாரணை வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னை நீலாங்கரையில் கடந்த 2010ஆம் ஆம் ஜூலை 4ஆம் தேதி இரண்டு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

அந்த மோதலில் இரும்பு ராடால் தாக்கியதில் பீகாரைச் சேர்ந்த பங்கஜ்குமார் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவர் கொலை

மாணவர் கொலை

இது குறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 30 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நீஷாந்த் என்பவரை, இதுவரை நீலாங்கரை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஜராகாத போலீஸ்

ஆஜராகாத போலீஸ்

இந்நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் வேறொரு போலீஸ்காரர் ஆஜரானார். இன்ஸ்பெக்டர் இரவு ரோந்தில் இருந்ததால் ஆஜராகவில்லை என்று நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் விளக்கம்

இன்ஸ்பெக்டர் விளக்கம்

இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைச் சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் நிறைவேற்றவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலையில், நீதிபதி ஐயப்பன் முன்பு ஆஜரான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், அனுபவம் இல்லாத போலீஸ்காரர் தன்னை பற்றித் தவறுதலாகக் கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் விளக்கம்

இன்ஸ்பெக்டர் விளக்கம்

இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைச் சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் நிறைவேற்றவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலையில், நீதிபதி ஐயப்பன் முன்பு ஆஜரான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், அனுபவம் இல்லாத போலீஸ்காரர் தன்னை பற்றித் தவறுதலாகக் கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.

English summary
Chengalpattu District Court issued a warrant for Inspector. Chengalpattu District Court latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X