சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மயிலாப்பூரை தொடர்ந்து மந்தைவெளியிலும் வேகம் எடுத்த கொரோனா.. ஒரே குடும்பத்தினர் 4 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மந்தைவெளி மற்றும் மயிலாப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உள்பட ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு! சென்னையில் எகிறும் கொரோனா

    சென்னையில் கொரோனா வைரஸ் கடந்த ஏப்ரல் 19ம் தேதியில் அசுர வேகம் எடுத்துள்ளது. அதுவரை மற்ற ஊர்களில் கொரோனா அதிகமாகவும் சென்னையில் மிதமாகவும் இருந்து வந்தது.

    ஆனால் ஏப்ரல் 19ம் தேதி முதல்முறையாக சென்னையில 50 பேருக்கு கொரோனா பரவியது. அதன்பிறகு ஏபரல் 21ம் தேதி மொத்தம் வெளியான 76 கேஸில் 55 சென்னையில் இருந்தது வந்திருந்தது.

    வேகமெடுத்த கொரோனா

    வேகமெடுத்த கொரோனா

    அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று 20க்குள் வந்தாலும், 28ம் தேதியான நேற்று 103 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. தற்போது சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் 90% கேஸ்கள் ஏற்பட்டு வருகிறது.

    கோயம்பேடு மோசம்

    கோயம்பேடு மோசம்

    கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளாக ராயபுரம்,, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் மிக அதிகமாக உள்ளன. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி வியாரிகள் 2 பேர் மூலம் பாடிக்குப்பம் பகுதியில் 13க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியதால் அதுவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக மாறியது. இதுதவிர நேற்று கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரே தெருவில் அதிகம்

    ஒரே தெருவில் அதிகம்

    இந்நிலையில் சென்னையில் மயிலாப்பூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டது நேற்று கண்டுபிடிக்கப்பபட்டது. மயிலாப்பூர் பகுதியில் உள்ள குடிசை பகுதி ஒன்றில் இப்படி வரிசையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.. அந்த குடிசை பகுதியில் 6 மாதம் குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்துடன் மேலும் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    குடும்பத்துக்கே கொரோனா

    குடும்பத்துக்கே கொரோனா

    மயிலாப்பூரை தொடர்ந்து மந்தைவெளியிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மந்தைவெளியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகள், மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சுற்றி உள்ளவர்கள், அவர்கள் வசிக்கும் தெரு பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    4 members of the same family include super market owner affected by Coronavirus in Chennai mandaveli
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X