சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள்.. வரும் விமானங்கள்.. நேர அட்டவணை.. முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இருந்து 19 விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன, இதேபோல் சென்னைக்கு 16 விமானங்கள் வருகின்றன. விமானங்கள் வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் குறித்த பட்டியலை சென்னை விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 4வது கட்டமாக ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில் முக்கியமான தளர்வு பொதுப்போக்குவரத்தை படிப்படியாக அமலுக்கு கொண்டுவருவது தான்.

பயணிகள் ரயில் சேவை வரும் ஜுன் 1 முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக விமான சேவை கொல்கத்தா தவிர பிறநகரங்களுக்கு இடையே இன்று முதல் தொடங்கி உள்ளது. கொல்கத்தாவிற்கு மட்டும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. புயல் பாதிப்பால் அங்கு விமான சேவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது

 சென்னைக்கு எத்தனை

சென்னைக்கு எத்தனை

இந்நிலையில் சென்னை விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் எத்தனை விமானங்கள் வருகின்றன. எத்தனை விமானங்கள் பிற ஊர்களுக்கு சென்னையில் இருந்து செல்கிறது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து 19 விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன, இதேபோல் சென்னைக்கு பிற ஊர்களில் இருந்து 16 விமானங்கள் வருகின்றன. அவற்றின் விவரங்களை இப்போது பார்ப்போம்

 கோவைக்கு இரண்டு

கோவைக்கு இரண்டு

சென்னையில் இருந்து டெல்லிக்கு ஐந்து விமானங்களும், பெங்களூருவுக்கு 2 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும், கோவைக்கு இரண்டு விமானங்களும், திருவனந்தபுரத்திற்கு ஒரு விமானமும், அந்தமானுக்கு ஒரு விமானமும், ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு 2 விமானமும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு ஒரு விமானமும், கேரள மாநிலம் கொச்சினுக்கு ஒரு விமானமும், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு ஒரு விமானம் என 19 விமானங்கள் சென்னையில் இருந்து செல்கின்றன.

 தூத்துக்குடி ஒன்று

தூத்துக்குடி ஒன்று

சென்னைக்கு வரும் விமானங்கள் என்று பார்த்தால் மொத்தம் 16 விமானங்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றன. டெல்லியில் இருந்து 5 விமானங்களும், பெங்களூருவுவில் இருந்து 1 விமானமும், கோவையில் இருந்து 1 விமானமும் , மதுரையில் இருந்து 1 விமானமும், வாரணாசியில் இருந்து ஒரு விமானமும், திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு விமானமும், குவஹாத்தியில் இருந்து ஒரு விமானமும், தூத்துக்குடியில் இருந்து ஒரு விமானமும், கொச்சினில் இருந்து 2 விமானமும் சென்னைக்கு வருகிறது.

 எத்தனை இயக்கலாம்

எத்தனை இயக்கலாம்

பயணிகள் விமான போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்படியே விமானங்கள் குறைவாக இயக்கப்படுகின்றன. விமான நேர அட்டவணையை கீழே உள்ள பட்டியலில் பாருங்கள்

English summary
Chennai airport update: Departure/Arrivals flights on 25.05 2020. All passengers are requested to get in touch with concerned airline for any further updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X