மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக தலை துண்டித்து ரவுடி கொலை.. தந்தை வாக்குமூலம்
சென்னை: மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக ரவுடியை கொன்று தலையை துண்டித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வீசியதாக அவரது தந்தை வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி மாதவன். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் உள்ள்பட 3 பேரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் ரவுடி மாதவன் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்,

இந்நிலையில் மாதவன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே தைலமர காட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். உடல் தைலமரக் காட்டில் இருந்தது. அந்த கும்பல் மாதவனின் தலையை துண்டித்து எடுத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் , கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (46), பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (18) மற்றும் 16 வயதான 2 சிறுவர்கள் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
"நல்லாருக்காரு நல்லகண்ணு.. சளிதான் இருக்கு.. நைட்டை விட இப்போ பரவாயில்லை".. குடும்பத்தினர் தகவல்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரை வெட்டி கொலை செய்யததால், ஆகாஷின் தந்தையான ரமேஷ், மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக மாதவனை கொலை செய்திருக்கிறார். திட்டமிட்டு மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து அவர்கள் மாதவனை கொலை செய்து, தலையை துண்டித்து மகன் இறந்த அதே இடத்தில் வைத்தது ரமேஷின் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது. தைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 2 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மற்ற 2 பேரை புழல் சிறையிலும் அடைத்தனர்.