சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோடிக்கணக்கில் குவியும் முதலீடுகள்.. இந்தியாவின் "சிலிகான் வேலி" ஆக உருவெடுக்கும் தமிழகம்.. டிவிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் "சிலிகான் வேலி'' பட்டத்தை பெங்களூரிடம் இருந்து தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப்பறிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் டெட்ராய்டு என்ற பட்டம் கொண்டது சென்னை. சென்னை முழுக்க இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் காரணமாக சென்னைக்கு டெட்ராய்டு என்று பெயர் வந்தது. சென்னை முழுக்க கணக்கில் அடங்காத அளவிற்கு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது சென்னை மீது செல்போன் நிறுவனங்கள், டெலிகாம் நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனாவில் இருக்கும் மற்ற நாட்டின் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகம் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

 பல்லாயிரம் கோடி முதலீடு.. சென்னைக்கு வருகிறது ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனமான பல்லாயிரம் கோடி முதலீடு.. சென்னைக்கு வருகிறது ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனமான "பெகட்ரான்"..!

என்ன நிலைமை

என்ன நிலைமை

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக அடுத்தடுத்து முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிச்சாமி பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததை அடுத்து முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிறுவனங்கள் தற்போது தமிழகத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கி உள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்ட நிறுவனங்கள்

அழைப்பு விடுக்கப்பட்ட நிறுவனங்கள்

தமிழக அரசு சார்பாக பின் வரும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெடக்ஸ் நிறுவனம், யுபிஎஸ் நிறுவனம், சவுதி அரெம்கோ நிறுவனம்,எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவனம், சிபிசி கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதோடு கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏனஜி மேட்டல் இங் ஆகிய நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதேபோல் தமிழக முதல்வர் மூலம் 20+ நிறுவனங்களுக்கு இதுவரை கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நல்ல பதில்

நல்ல பதில்

இதில் அந்த முன்னணி நிறுவனங்களுக்கு நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டது . நிதி உதவி, இடங்கள் குறைந்த விலையில் வழங்கப்படுவது, குறைந்த விலையில் ஊழியர்களை வழங்குவது , தண்ணீர் மின்சார வசதிகளை வழங்குவது என்று நிறைய உதவிகளை செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் தங்கள் கிளையை தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

தமிழகம் வருகிறது

தமிழகம் வருகிறது

  • அந்த வகையில் இன்று தமிழகம் வர 4 முக்கியமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறது.
  • அதன்படி மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஏத்தா் எனா்ஜி பிரைவேட் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.600 கோடி செலவில் தொடங்க உள்ளது.
  • திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகையில் பிலிப்ஸ் நிறுவனம் ரூ.600 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்க உள்ளது .
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் டைசெல் காா்ப்பரேஷன் நிறுவனம் ரூ.900 கோடியில் முதலீடு செய்கிறது.
  • ஐ.டி.சி., நிறுவனம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய ரூ.515 கோடியில் காகித ஆலை அமைக்க உள்ளது.
சென்னை வருகிறது

சென்னை வருகிறது

இது போன் சென்னைக்கு வரிசையாக தைவான் நிறுவனங்கள் இடம்பெற முடிவு செய்து உள்ளது. அதன்படி சென்னையில் ஃபாக்சான் நிறுவனம் சுமார் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் இருக்கும் தங்கள் தொழிற்சாலையை விரிவாக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். சீனாவில் இருந்து வெளியேறும் இந்த நிறுவனம் சென்னையில் முழுக்க முழுக்க தங்கள் முதலீடுகளை செய்ய இருக்கிறது.

வேறு நிறுவனம்

வேறு நிறுவனம்

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் தங்கள் நிறுவனத்தை தொடங்குவதாக இவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இன்னும் வருகிறது

இன்னும் வருகிறது

இதில் கவனிக்க வேண்டிய இந்த இரண்டு நிறுவனங்களும் தைவான் நிறுவனங்கள் ஆகும். தைவான் நிறுவனங்கள் வரிசையாக சென்னையை குறி வைக்க தொடங்கி உள்ளது. இரண்டுமே ஆப்பிளுக்கு பாகங்களை அனுப்பும் நிறுவனம் ஆகும். சென்னையில் தொழிற்சாலையை தொடங்குங்கள் என்று ஆப்பிள் வைத்த கோரிக்கை காரணமாக, இந்த நிறுவனங்கள் தமிழகம் வருகிறது . இன்னும் நிறைய தைவான் நிறுவனங்கள் இதேபோல் தமிழகம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அமெரிக்கா சென்றார்

அமெரிக்கா சென்றார்

தமிழக முதல்வர் பழனிச்சாமியின் அமெரிக்க பயணத்திலேயே இதற்கான விதை போடப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். அப்போதே அவர் முக்கியமான அமெரிக்க நிறுவனங்கள் உடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருந்தார். தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையை அப்போதே அவர் மேற்கொண்டு இருந்தார். அதன் பயனாகவே தற்போது தமிழகத்தில் முதலீடுகள் வருகிறது என்கிறார்கள்.

சிலிகான் வேலி

சிலிகான் வேலி

கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது . ஆனால் தமிழகம் இன்னொரு பக்கம் முதலீடுகளை ஈர்க்க தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவின் "சிலிகான் வேலி'' பட்டத்தை பெங்களூரிடம் இருந்து தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப்பறிக்க தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தொழிற்நிறுவனங்கள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

English summary
Chennai and other parts of Tamilnadu getting good investments from Major companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X