சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக மீண்டும் சென்னை வந்தடையும் சுற்றுவட்ட ரயில் சேவைகள் இன்று தொடங்கியது.

செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள், மூர்மார்கெட் அல்லது கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்துதான் அரக்கோணம் செல்லும் நிலை இருந்தது. இதனால் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு அரக்கோணம், இடையே சுற்றுவட்ட ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Train

இந்நிலையில் சென்னை கடற்கரை சுற்றுவட்ட ரயில் சேவையை தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனால் இன்று முதல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-திருமால்பூர்-அரக்கோணம்- சென்னை கடற்கரைக்கு சுற்றுவட்ட மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்த ரயில் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அங்கிருந்து அரக்கோணம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வழியாக மீண்டும் மாலை 4.10க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

கோமியம் குடித்தேன்.. புற்று நோய் பறந்தே போயிருச்சு.. அதிர வைக்கும் பாஜக பெண் சாமியாரின் பேட்டி! கோமியம் குடித்தேன்.. புற்று நோய் பறந்தே போயிருச்சு.. அதிர வைக்கும் பாஜக பெண் சாமியாரின் பேட்டி!

இதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், வழியாக மீண்டும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். இந்த புதிய சுற்றுவட்ட ரயில் சேவை வசதியால் சென்னை புறநகர் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
chennai beach to chennai beach, today start two circular trains on Chennai​ suburban route
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X