சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீச்செல்லாம் கலர் பேப்பர்.. கூப்பிடுங்க அந்த பர்த்டே பேபியை.. இந்தா துடைப்பம்.. கலக்கிய கிறிஸ்டோபர்

அசுத்தப்படுத்திய பீச்சை சம்பந்தப்பட்டவர்கள் வைத்தே சுத்தப்படுத்திய பெசன்ட் நகர் போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    PC Christopher: பீச்சில் குப்பை போட்ட இளைஞர்கள்.. சரியான படிப்பினை கொடுத்த போலீஸ்காரர்- வீடியோ

    சென்னை: இனி ஒருத்தரும் இஷ்டத்துக்கு பீச்-ல குப்பை போட முடியாது போல இருக்கு.. யார் குப்பை போடறாங்களோ அவங்களுக்கு நூதன தண்டனை தருவதற்காக வந்துவிட்டார் கிறிஸ்டோபர்!

    குப்பையை தாறுமாறா போட்டுட்டு போறவங்களுக்கு பீச் என்ன, ரோடு என்ன.. எல்லா இடமும் ஒண்ணுதான். சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிப்பது என்பதெல்லாம் ஸ்கூல்ல படிச்சதோடு சரி.. அப்பப்ப விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினாலும் அதை முழுமையாக யாரும் கடைப்பிடிப்பதில்லை.

    ஸ்வச் பாரத் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.. வந்த புதிதில் எல்லா தலைவர்களும் கையில் ஒரு துடைப்பக்கட்டையை எடுத்து கொண்டு சுற்றுப்புற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதுவும் இப்போது காணோம்!

    வாட்ச் பண்ணுங்க

    வாட்ச் பண்ணுங்க

    ஃபாரீனில் குப்பை போட்டால் அபராதம் என்கிறார்கள். நம்ம ஊரில் அப்படி ஒரு கெடுபிடி இல்லை.. அதனால் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லாமல் போய்விட்டது. இதனால்தான் சென்னை ஐகோர்ட் தூய்மை குறித்து அழுத்தி சொன்னது. குறிப்பாக மெரினா பீச்சில் யார் குப்பை போடுகிறார்களோ அவர்களை கண்காணியுங்கள், "வாக்கிங் போய்ட்டே இதை வாட்ச் பண்ணுங்க" என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவு மூலம் அறிவுறுத்தியது.

    <strong>EXCLUSIVE:</strong> பரமக்குடியை கலக்கிய EXCLUSIVE: பரமக்குடியை கலக்கிய "உள்ளே வெளியே" .. அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் இதை பார்த்து

    கலர் கலர் பேப்பர்கள்

    கலர் கலர் பேப்பர்கள்

    இந்நிலையில் நண்பன் பிறந்த நாளை கொண்டாட ஒரு குரூப் பெசன்ட் நகர் பீச்சிற்கு வந்திருக்கிறார்கள். எலியட்ஸ் கடற்கரை பிளாட்பாரத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள். கேக் இல்லாமல் பார்ட்டியா? பெட்டி பெட்டியாக கேக் வந்தது. கேக் வெட்டும்போது கலர் கலராக பேப்பர்களை வெடித்து முகத்தில் பூசியும், கேக்குகளை வாயில் போட்டு சாப்பிடாமல், அதை முகத்தில் அப்பியும் களேபரம் பண்ணி விட்டார்கள். கூடவே டான்ஸ், பாட்டு எல்லாம் இனிதே நிறைவேறியது. கடைசியில் கேக் டப்பா உள்ளிட்ட எல்லா குப்பைகளையும் அங்கேயே போட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்கள்.

    ஆர்டர் செய்தது யார்?

    ஆர்டர் செய்தது யார்?

    மறுநாள் காலை எபென் கிறிஸ்டோபர் அங்கு வந்தார். இவர் சாஸ்த்ரி நகர் போலீஸ் ஸ்டேஷன் போலீஸாக உள்ளார். குப்பைகளை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார். கேக் டப்பாவை பார்த்ததும், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு போன் செய்து, யார் ஆர்டர் செய்தது என்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அந்த "பர்த்டே பேபியை" பீச்சுக்கு நண்பர்களுடன் வரவழைக்க செய்தார்.

    துடைப்பக்கட்டை

    துடைப்பக்கட்டை

    சிசிடிவி கேமராவில் செய்த அட்டகாசங்களை அவர்களுக்கு போட்டு காட்டிய கிறிஸ்டோபர், "இப்படி செய்யலாமா? இங்கெல்லாம் குப்பை போடலாமா" என்று அறிவுறுத்தினார். அதோடு விடவில்லை கிறிஸ்டோபர், ஆளுக்கு ஒரு துடைப்பத்தை கையில் தந்து எல்லாவற்றையும் சுத்தமாக பெருக்க சொன்னர். இளைஞர்களும் சுத்தம் செய்துவிட்டு, செய்தது தப்புதான் என்று வருத்தம் சொல்லிவிட்டு போனார்கள்.

    இப்போது கிறிஸ்டோபருக்கு எக்கச்சக்க பாராட்டுகள் குவிந்து வருகிறதாம்!

    English summary
    Chennai Besant Nagar Police Officer Christopher made the Youngsters to Clean the Beach
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X