சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை புத்தக கண்காட்சி, ஜன. 4ல் துவக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுவதாக தென்னிந்தியத் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுத் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்தியத் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் வயிரவன் கூறியதாவது:

Chennai book fair will be start from January 4

ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் சென்னை புத்தககண்காட்சி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும், முதல் முறையாக இந்தக் கண்காட்சி 17 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இதில் 800 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 12 லட்சம் தலைப்புகளில் 1 அரை கோடி புத்தகங்களுக்கு மேலாக கண்காட்சியில் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தக கண்காட்சியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இங்கு விற்கப்படும் புத்தகங்கள் அனைத்திற்கும் 10% தள்ளுபடி உள்ளதாகவும் கூறிய அவர் இங்கு பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிறந்த பதிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
Chennai book fair will be start from, January 4, TN CM will start the fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X