சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை குத்துச்சண்டை மாணவி தமிழ் வெளிநாட்டு போட்டியில் பங்கேற்க பணம் இல்லாமல் தவிப்பு- உதவுமா அரசு?

Google Oneindia Tamil News

சென்னை குத்துச்சண்டை மாணவி தமிழ் வெளிநாட்டு போட்டியில் பங்கேற்க பணம் இல்லாமல் தவிப்பு- உதவுமா அரசு?

Recommended Video

    India-காக பதக்கம் ஜெயிப்பேன்..உதவுங்க- Boxing வீராங்கனை உருக்கம் #HumanInterestStories

    சென்னை : சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை மாணவி, தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்ற போதிலும், வெளிநாட்டிற்கு சென்று போட்டியில் பங்கேற்க பணம் இல்லாமல் தவித்து வருகிறார். தமிழக அரசும், விளையாட்டுத்துறையும் தனது மகளுக்கு உதவ வேண்டும் என மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை மாத்தூர் பகுதியில் வசிக்கும் தமிழ் இனியவன் என்பவரின் இரண்டாவது மகளான தமிழ் என்பவர், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை கண்ட தந்தை, நாட்டிற்காக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது மகளை குத்துச்சண்டையில் கிக் பாக்சிங் வகுப்பில் சேர்த்து விட்டு பயிற்சி அளித்து வந்தார்.

    ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரும் 3 'பெரும் தலை’கள்.. பெரிய சம்பவம் நடக்குமா? - தகிக்கும் அதிமுக!ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரும் 3 'பெரும் தலை’கள்.. பெரிய சம்பவம் நடக்குமா? - தகிக்கும் அதிமுக!

    பதக்கங்களை குவித்த மாணவி

    பதக்கங்களை குவித்த மாணவி

    இந்நிலையில். கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான மாநில கிக் பாக்ஸிங் போட்டியில், மாணவி தமிழ், வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை முதன் முறையாக வென்றார். இதேபோல், தென்னிந்திய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்று அனைவரையும் பிரமிக்க வைத்தார் குத்துச்சண்டை மாணவி தமிழ். இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 17 மாநிலங்கள் கலந்து கொண்டு இந்தூர் உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாடிய போது, அதிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் மாணவி தமிழ்.

    இந்தியா சார்பில் பதக்கம் வென்றார்

    இந்தியா சார்பில் பதக்கம் வென்றார்

    பின்னர் நேபாலில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பாக கிக் பாக்ஸிங்கில் 27 கிலோ எடை பிரிவு பகுதியில் மாணவி தமிழ் கலந்துகொண்டார். அதிலும் வெற்றி பெற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்ற குவித்தார். இவ்வாறு எந்த போட்டிக்கு சென்றாலும் அனைத்து போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கத்தை குவித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

    கம்போடியாவில் சர்வதேச போட்டி

    கம்போடியாவில் சர்வதேச போட்டி

    கம்போடியா நாட்டில், வரும் டிசம்பர் மாதம் 107 நாடுகள் பங்கேற்று விளையாட உள்ள குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. கம்போடியாவில் நடைபெறும் கிக் பாக்ஸிங் போட்டிக்கு மாணவி தமிழ் தேர்வு பெற்றபோதிலும், வெளிநாட்டிற்கு சென்று வருவதற்கான பணம் இல்லாமல் தவித்து வருகிறார் அந்த ஏழை மாணவி.

    ஏழை தந்தையின் விருப்பம்

    ஏழை தந்தையின் விருப்பம்

    மாணவி தமிழின் தந்தை சாதாரண கூலி வேலை பார்த்து வரும் நிலையில், வெளிநாட்டிற்கு தனது மகளை அனுப்பி வைத்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்று சாதனை படைக்க பணம் இல்லாமல் கையை பிசைந்தபடி நிற்கிறார்.
    இதுகுறித்து அவர் கூறுகையில், தனது மகள் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். ஆனால் தற்பொழுது, இந்தியாவின் சார்பாக வெளிநாட்டிற்கு தனது மகள் சென்று விளையாட தன்னிடம் போதிய வசதிகள் இல்லை.

    விளையாட்டுத்துறை உதவ கோரிக்கை

    விளையாட்டுத்துறை உதவ கோரிக்கை

    அரசும் விளையாட்டு துறை அமைச்சகமும் இதனை கருத்தில் கொண்டு, தனது மகள் வெளிநாட்டிற்கு சென்று விளையாடுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகள் வெளிநாட்டிற்கு சென்று போட்டிகளில் கலந்து கொண்டால், நிச்சயமாக இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டையும் ஊரையும் பெருமைப்படுத்த தனது மகளின் கனவு நிறைவேற யாரேனும் கை கொடுத்து உதவுவார்களா என்று கண்களில் நீர் ஒழுக காத்திருக்கிறார் அந்த ஏழை தந்தை.

    நாட்டுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க துடிக்கும் இந்த ஏழை குத்துச் சண்டை மாணவிக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஏழை, எளிய மாணவர்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, தமிழ் என பெயருடைய இந்த ஏழை மாணவிக்கு, உதவாமலா போகப் போகிறது?... பொருந்திருந்து பார்ப்போம்...

    English summary
    Boxing student from Chennai. He is running out of money to participate in the tournament abroad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X