சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வளர்மதி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா.. அதிரடியாக நுழைந்த போலீஸ்.. ஒரே ஓட்டம்!

லஞ்சம் கேட்ட பெண் அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வளர்மதி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீஸை பார்த்ததும், அப்படியே எஸ்.ஆகிவிட்ட இந்த பெண் அதிகாரி வளர்மதியை தேடி வருகிறார்கள்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பரதன்... திருவள்ளூர் அருகே நவீன எடைமேடை எந்திரங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் லைசன்ஸ் சமீபத்தில் முடிந்துவிட்டது.

 chennai bribery woman officer escaped with four

அதனால் புதுப்பிப்பதற்காக பரதன், ஆன்லைனில் அப்ளை செய்திருந்தார்.. ஆனால் புதுப்பித்தல் தாமதமாகி கொண்டே இருந்தது.. இதனால் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை ஆபீசில் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் ஜான்பிரகாஷ் என்பவரிடம் இதை பற்றி தெரிவித்தார்.. உடனே பிரகாஷ், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வளர்மதியை போய் பாருங்க.. 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால், அவங்க கையெழுத்து போட்டுடுவாங்கன்னு சொன்னாராம்.

இதை கேட்டு ஷாக் ஆன பரதன், லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று சொல்லி உள்ளார்.. அவர் ஒரு பக்கம் லஞ்சம் பற்றியே பேச, பரதனோ அதற்கு பிடி கொடுக்காமல் பேச, இப்படியே கடைசிவரை இழுத்தடிக்கப்பட்டு, லைசென்சும் புதுப்பிக்க முடியாமலேயே இருந்திருக்கிறது..

இறுதியில் பரதன், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி. லவக்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து வளர்மதி வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றனர்... ஆனால் முன்னதாகவே விஷயத்தை கேள்விப்பட்ட வளர்மதி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ், உதவி இன்ஸ்பெக்டர் ரவி, ஆபீஸ் உதவியாளர் முருகவேல் ஆகிய 4 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

சென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்சென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்

இதனால் ஏமாற்றமடைந்த அதிகாரிகள், வளர்மதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.. அங்கே சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.. அவைகளை எடுத்து கொண்டு, வளர்மதி வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இன்னும் வளர்மதி கிடைக்கவில்லை.. அவர் உட்பட தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
chennai bribery woman officer escaped with four
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X