சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டார் அந்தஸ்துக்கு மாறும் மத்திய சென்னை.. தயாநிதி மாறன், கமீலா நாசர்.. மகுடம் யாருக்கு ?

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய சென்னையில் போட்டியிடும் பிரபலங்கள்..யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?- வீடியோ

    சென்னை: சென்னையில் உள்ள முக்கியமான மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று மத்திய சென்னை. இந்த தொகுதி இப்போது ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.

    சென்னையில் உள்ள தொகுதிகளில் பெரும்பாலும் பிரபலங்களே களம் இறங்குவதால் அந்த தொகுதிகள் மாநில மக்களின் கவனத்தை மட்டுமல்லாது சில நேரங்களில் இந்திய அளவில் கவனம் ஈர்ப்பதும் உண்டு. அந்த வகையில் இந்தமுறையும் மத்திய சென்னை மாநில மக்களின் கவனம் ஈர்க்கும் ஒரு தொகுதியாக ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.

    இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் ஸ்டாலினின் உறவினருமான தயாநிதி மாறன் போட்டியிடப் போகிறார். இதனால் இப்போதே திமுக நிர்வாகிகள் தொகுதிப்பக்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இரண்டு முறை தொடர்ந்து இந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற தயாநிதிமாறன் கடந்த 2014 ம் ஆண்டு தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்று ஹாட்ரிக் அடிக்கலாம் என்றிருந்த வேளையில் அதிமுக வேட்பாளர் விஜயகுமாரிடம் தோல்வியைத் தழுவினார்.

    திருச்சிக்கு செம டிமாண்ட்.. வைகோ, திருநாவுக்கரசர், தயாநிதி மாறன், சபரீசன்.. லிஸ்ட் பெருஸ்ஸா இருக்கே! திருச்சிக்கு செம டிமாண்ட்.. வைகோ, திருநாவுக்கரசர், தயாநிதி மாறன், சபரீசன்.. லிஸ்ட் பெருஸ்ஸா இருக்கே!

    மாறன் குடும்பம்

    மாறன் குடும்பம்

    அதற்கு முன்னர் இருமுறை வெற்றி பெற்றபோது மத்திய அமைச்சராகும் வாய்ப்பை பெற்றார் தயாநிதி. இந்த தொகுதியைப் பொறுத்த மட்டில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. கடந்த முறை தயாநிதி களம் இறங்கியபோது கருணாநிதியின் குடும்ப பெண்கள் கூட இவருக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த தொகுதியில் தயாநிதி மாறன் களம் இறங்கப்போகிறார் என்பதால் இப்போதே இந்த தொகுதி கவனம் ஈர்த்து வருகிறது.

    தினகரன் அணி

    தினகரன் அணி

    அமமுக சார்பில் அதன் கூட்டணி கட்சி இங்கு களமிறங்கப் போகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி இங்கு வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் தீவிரமாக இங்கு பணியாற்றி வருகிறார்கள். தெகலான் பாகவிக்கு தனிப்பட்ட முறையிலும் இங்கு செல்வாக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    நாசர் மனைவி கமீலா

    நாசர் மனைவி கமீலா

    மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் இந்த தொகுதியில் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் கமீலா நாசர் இங்கு போட்டியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதே வேளையில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசனும் இங்கு போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அவர் தனது சொந்த ஊரான பரமக்குடி அடங்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார் எனவே கமீலா நாசர் இங்கு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

    முஸ்லலீம்கள் அதிகம்

    முஸ்லலீம்கள் அதிகம்

    இந்த தொகுதியை பொருத்தமட்டில் 3 லட்சத்திற்கு அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை திமுக, எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெகலான் பாகவி, கமீலா நாசர் ஆகியோர் குறிவைத்துள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் எந்த கட்சி இங்கு களம் இறங்கப் போகிறது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதோடு அவர்களுக்கு இங்கு சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்குமா என்பதுவும் சந்தேகமே.

    English summary
    Chennai Central LS seat is becoming a star constituency as many VIPs are getting ready to contest here in the LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X