• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பொய் தகவல்,மதக்கலவரத்தை தூண்ட முயற்சி என புகார் பாஜக பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு.. எச்சரித்த போலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை : பொது மக்களிடையே வதந்தியை பரப்பி மத கலவரத்தை உருவாக்கும் வகையில் விட்டதாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக பாஜக இளைஞரணி செயலாளராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினோஜ் பி செல்வம் நியமிக்கப்பட்டார். ஆக்டிவான இளைஞரான அவர் ட்விட்டரிலும் சுறுசுறுப்பாக செயல்பட கூடியவர்.

மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக இளைஞரணி கட்டமைப்பை வலுப்படுத்தும் வருகிறார். தீவிர பாஜக முழு நேர ஊழியரான வினோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

”மேயர்” கனவில் கூட்டணி கட்சிகள்..அசைந்து கொடுக்காத திமுக-அதிமுக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபர ”மேயர்” கனவில் கூட்டணி கட்சிகள்..அசைந்து கொடுக்காத திமுக-அதிமுக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபர

பாஜக வினோஜ் பி.செல்வம்

பாஜக வினோஜ் பி.செல்வம்

கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாணவி மரணம் குறித்து கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தான் வினோஜ் பி செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி, சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது எனவும், உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு என பதிவிட்டிருந்தார்.

சர்ச்சை ட்விட்டர் பதிவு

சர்ச்சை ட்விட்டர் பதிவு

தமிழகத்தில் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாகவும், ஆலயங்களை ஜேசிபி கொண்டு இடிப்பது போலவும், ஜேசிபி மீது ஒருவர் கை வைத்து அதனை வேடிக்கை பார்ப்பது போல புகைப்படத்தையும் வினோஜ் பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் இந்து ஆலயங்களை இடிப்பது போல பொய்யான தகவலை பரப்பி மக்களிடையே கலகத்தை தூண்ட முயற்சிப்பதாக வினோஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத வெறுப்புணர்வை தூண்டும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வினோஜ் மீது புகார்

வினோஜ் மீது புகார்

சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் வினோஜ் P.செல்வம் என்பவர் தன்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும். பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

மேற்கண்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கானது புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் விஜோஜ் மீது வினோஜ் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  யாரும் மதம் மாற சொல்லவில்லை.. நாங்கள் ஒற்றுமையா இருக்கோம்.. அரசியலாக்காதீங்க -அரியலூர் கிராம மக்கள் - வீடியோ
  காவல் ஆணையர் எச்சரிக்கை

  காவல் ஆணையர் எச்சரிக்கை

  இந்நிலையில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், எச்சரித்துள்ளார்.

  English summary
  Chennai Central Crime Branch Cyber Crime Police have registered a case against BJP youth leader Vinoj P. Selvam for spreading rumors among the public and creating religious unrest on Twitter.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X