சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Heavy rain is expected in the next 24 hours in 14 districts of Tamil Nadu

    சென்னை: சென்னை நகரில் நேற்று ஒரே நாளில் 104 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களை ஒப்பிடும் கடந்த 8 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய மழை பொழிவு என்றும் அவர் கூறியுள்ளார்.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட சென்னையில் மிக அதிக அளவு பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை சென்னையில் பெருமழை பெய்தது.

    இந்த மழையால் சென்னை சாலைகள் வெள்ளம் மிகுந்த குளமாக மாறின. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் சென்னையில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    விளக்கும் வெதர்மேன்

    விளக்கும் வெதர்மேன்

    இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை நகரத்திற்கு இன்று104 மில்லி மீட்டர் மழை தென்மேற்கு பருவ மழையால் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வு எவ்வளவு அரிதானது மற்றும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

    செப்டம்பரில் 100 மிமீ

    செப்டம்பரில் 100 மிமீ

    1. கடைசியாக ஜூன் மாதம் சென்னையில் 100 மில்லி மீட்டர் மழை பெய்தது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தான் 156.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. எனவே 8 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழையால் இப்படி ஒரு மழை சென்னைக்கு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்வது இது 6வது முறையாகும்.

    செப்டம்பர் மழை நிலவரம்

    செப்டம்பர் மழை நிலவரம்

    முன்னதாக 100 மில்லி மீட்டருக்கு மேல் செப்டம்பர் மாதங்களில் மழை பெய்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

    167.4 மி.மீ- 12.09.1996
    150.9 மி.மீ- 30.09.1984
    105.1 மி.மீ- 26.09.2003
    104.9 மி.மீ- 17.09.1956
    104.0 மி.மீ- 19.09.2019
    100.1 மி.மீ- 25.09.1924

    100 மிமீ மழை பொழிவு

    100 மிமீ மழை பொழிவு

    கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு 100 மில்லி மீட்டர் மழைபொழிவு ஒரே நாளில் செப்டம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே பெய்திருப்பது இது நான்காவது முறையாகும்.

    156.2 மி.மீ- 25.08.2011
    105.1 மி.மீ- 26.09.2003
    104.0 மி.மீ- 19.09.2019
    100.3 மி.மீ- 20.08.2008

    2017ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு

    2017ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு

    கடைசியாக சென்னை நகரத்தில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை என்பது 03.11.2017 அன்று பெய்தது. சென்னை நகரத்திற்கு அன்று ஒரே நாளில் 183 மில்லி மிட்டர் மழை பெய்தது. அதன்பிறகு இன்று தான்(நேற்று அக்.19) ஈரப்பதமான நாள் ஆகும். சென்னையின் ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு இந்த நாள் சிறப்பான நாளாகும். சில நேரங்களில் கணிப்புகளையும் மீறி இப்படி ஒரு பலத்த மழை பெய்யும் என்றார்.

    English summary
    tamilnadu weatherman on socila media: Chennai City got 104 mm yesterday. Lets see how rare the event was and how significant this is, being South West Monsoon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X