• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாகாராட்சியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாகக் கட்டப்படுத்தப்பட்ட மண்டலங்கள் இல்லாத பகுதியாகத் தலைநகர் சென்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச்- ஏப்ரல் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது.

அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரைகூட சென்றது. நிலைமை மெல்லக் கட்டுப்பாட்டை விட்டுச் செல்வது போலத் தோன்றியது.

அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா?எய்ம்ஸ் இயக்குநர் பளிச்அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா?எய்ம்ஸ் இயக்குநர் பளிச்

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பல்வேறு மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. சில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது. அதன் பிறகு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியது.

தலைநகர் சென்னை

தலைநகர் சென்னை

முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலையிலும் சரி கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முக்கியமானதாகச் சென்னை இருந்தது. குறிப்பாக இரண்டாம் அலை சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,500 வரை கூட சென்றது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 110 வரை சென்றது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

காய்கறி & பழக்கடைகள், மளிகைக் கடைகள் ஆகியைகூட மூடப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பிலேயே காய்கறி & பழக்கடைகள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டன. மேலும், சென்னை நகர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்குச் செல்ல இ பதிவு கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்கள் தேவையில்லாமல் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்குச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

முக்கிய நடவடிக்கை

முக்கிய நடவடிக்கை

கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில், கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கவே 3 நாட்கள் வரை ஆனாது. அந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா நோயாளிகள் தங்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரியாமலேயே மற்றவர்களுக்குப் பரப்பி வந்தனர். இதையடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ள வரும் நபர்களுக்கு அறிகுறி இருந்தாலே அவர்களை, கொரோனா பாசிட்டிவ் ஆகக் கருதி மருத்துவ கிட்டை வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார் ஆணையர் ககன்தீப்சிங் பேடி.

ஆம்புலன்ஸ் கார்

ஆம்புலன்ஸ் கார்

மேலும், கொரோனா படுக்கைகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதி கொண்ட சிறிய கார் ஆம்புலன்ஸ் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதைப் பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டிருந்தார். அதேபோல சென்னையில் உள்ள முக்கிய நகரங்களில் படுக்கை வசதி அதிகப்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், தேவைப்பட்டால் மண்டபங்களும் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு இல்லை

உயிரிழப்பு இல்லை

இதுபோல தமிழ்நாடு அரசும், சென்னை மாநாகட்சியும் இணைந்து எடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாகத் தலைநகரில் வைரஸ் பாதிப்பு கிடுகிடுவெனச் சரியத் தொடங்கியது. மேற்கு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த போதும், தலைநகரில் கொரோனா குறைந்தது. குறிப்பாகக் கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை 11ஆம் தேதி கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாமலிருந்தது.

  Coronavirus தோற்றம்.. Wuhan-ல் மீண்டும் ஆய்வு செய்ய WHO முடிவு.. எதிர்க்கும் China
  கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் இல்லாத நகர்

  கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் இல்லாத நகர்

  அதேபோல ஒரே வீதியில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், அந்த பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. சென்னையில் தற்போது எந்தவொரு தெருவிலும் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் இல்லாத நகர் நீடிக்கிறது. தலைநகரில் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் ஒரே வீதியில் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  சென்னை

  சென்னை

  ஒரு கட்டத்தில் சென்னையில் 3500 வரை சென்ற கொரோனா பாதிப்பு, நேற்று வெறும் 135ஆகக் குறைந்துள்ளது. கொரோனாவின் தலைநகராக இருந்த சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகளால் இப்போது கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் இல்லாத நகராக உருவெடுத்துள்ளது.

  English summary
  Corona cases Continue to decrease in Chennai due to strict actions by Chennai Corporation. yesterday 135 cases alone were registered in Chennai.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X