சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க்கே போடலை.. கேரம் விளையாடிட்டிருக்காங்க.. போய் தடுங்க.. போலீஸுக்கு இன்பார்ம் செய்த ராமதாஸ்!

மாஸ்க் இல்லாமல் இளைஞர்கள் கேரம் விளையாடுகிறார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மாஸ்க் போடல.. சோஷியல் டிஸ்டன்ஸ் இல்லை.. கேரம் விளையாடிட்டு இருக்கிறாங்க போல தெரியுது.. இளைஞர்களின் இச்செயலை போலீசார் தடுக்க வேண்டும்" என்று சென்னை காவல்துறையினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றை ஒழிப்பதில் மிக மிக தீவிரமாக இருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. மக்களுக்கு அந்த தொற்று குறித்து அட்வைஸ்களை தந்து எச்சரித்தபடியே உள்ளார்.. மற்றொரு பக்கம் தமிழக அரசுக்கு தொற்றை ஒழிக்க யோசனைகளை தந்தும் வருகிறார்.

 chennai corona: dr ramadoss tweet about chennai coronavirus issue

குறிப்பாக, சென்னையில் அவரது அக்கறையும், அட்வைசும் அதிகரித்தபடியே உள்ளது.. சென்னையை கண்காணித்து கொண்டே இருக்கிறார்.. சில தினங்களுக்கு முன்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதில், "சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு காக்கை, குருவிகள் கூட கூடுகளை விட்டு வெளியில் வரவில்லை. மக்களும் சாலைகளுக்கு வரவில்லை. இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்!" என்று பாராட்டினார்.

பாதி ஊரு கொரோனால காலி ஆகிடுச்சு.. இப்போ இதைக் கேட்டா மீதியும் காலி ஆகிடுமேய்யா!பாதி ஊரு கொரோனால காலி ஆகிடுச்சு.. இப்போ இதைக் கேட்டா மீதியும் காலி ஆகிடுமேய்யா!

இதற்கு ட்விட்டர்வாசிகளும், "மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று வெளியில் வராத காக்கை குருவிகளுக்கு நன்றி" என்றும் "சென்னையில காக்கை குருவியா? நீங்க பார்த்தீங்க... நல்லா பார்த்தீங்க.. அப்ப சரி" என்றும், சூப்பர் ஐயா என்றும் கமெண்ட்களை தெரிவித்திருந்தனர்.

 chennai corona: dr ramadoss tweet about chennai coronavirus issue

இப்போது இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் இளைஞர்கள் கூட்டமாக முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடுவதாக தெரிகிறது. இது கொரோனா நோய்ப்பரவலுக்கே வழிவகுக்கும். இதை காவல்துறையினர் தடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்களும், "விடுங்க ஐயா.. அடர்த்தி குறையட்டும்.. கொரோனா அவனுங்கள கட்டுப்படுத்தட்டும்" என்றும், "சுய கட்டுப்பாடு இல்லாத, சுய ஒழுக்கம் இல்லாத, படித்த இளைஞர் கூட்டம், இவர்கள் செயலால் இவர்கள் அல்லாத குடும்பம் ஒழுக்கம் கட்டுப்பாடு உடையவர்களும் பாதிக்கிறார்கள். தண்டனைக்குரிய குற்றத்தை செய்யும் இவர் போன்றவர்களுக்கு, அரசாங்க சலுகைகளை மறுக்கப்பட வேண்டும்" என்றும் இதற்கு பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால் எப்படி இருந்தாலும், எப்படி விஷயம் இருந்தாலும் பாராட்டுகிறார்.. தப்பு என்றாலும் சுட்டிக்காட்டி ட்வீட் போடுகிறார்... அதான் டாக்டர் ராமதாஸ்!

English summary
chennai corona: dr ramadoss tweet about chennai coronavirus issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X