சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ்..! சென்னையில் காக்கா, குருவிகூட வெளியே வரவில்லை.. டாக்டர் ராமதாஸுக்கு செம ஹேப்பி!

சென்னையில் லாக்டவுன் குறித்து ராமதாஸ் பாராட்டு தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "சபாஷ்..! சென்னையில் காக்கா, குருவிகூட வெளியே வரவில்லை" என்று டாக்டர் ராமதாஸ் ஒரு ட்வீட் போடவும், "நீங்க பார்த்தீங்க... நல்லா பார்த்தீங்க.. அப்ப சரி" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு. அப்படியா ஐயா என்று கேட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றை ஒழிப்பதில் மிக மிக தீவிரமாக இருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. மக்களுக்கு அந்த தொற்று குறித்து அட்வைஸ்களை தந்து எச்சரித்தபடியே உள்ளார்.. மற்றொரு பக்கம் தமிழக அரசுக்கு தொற்றை ஒழிக்க யோசனைகளை தந்தும் வருகிறார்.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் சென்னையில் தொற்று எல்லை மீறி விடவும், "எதையாவது சீக்கிரமா செய்யுங்க.. அடுத்த சில நாட்களில் சென்னையில் டெஸ்ட்டுகளை 20,000 ஆக உயர்த்த வேண்டும்.. அதன் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்... டெல்லியால் சாத்தியமாவது தமிழகத்தில் முடியாதா?" என்று கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

ட்வீட்

ட்வீட்

இந்த சமயத்தில்தான் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு லாக்டவுனுக்குள் ஒரு லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. இதை பற்றி டாக்டர் ராமதாஸ் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு காக்கை, குருவிகள் கூட கூடுகளை விட்டு வெளியில் வரவில்லை. மக்களும் சாலைகளுக்கு வரவில்லை. இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்!" என்று பாராட்டி உள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள், ஊரடங்கு நீட்டிப்பு, டெஸ்ட்களை அதிகப்படுத்த வேண்டும் என்பன உட்பட திமுக தலைவர் ஸ்டாலின் முதல் டாக்டர் ராமதாஸ் வரை கோரிக்கை, வேண்டுகோள்களுடன் அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.. தமிழக அரசும் மக்களின் நல்லதை உணர்ந்து ஒவ்வொரு அறிவிப்பையும் அறிவித்து, அமல்படுத்தி வருகிறது.

பாமக

பாமக

ஆனால், திமுகவும் சரி, பாமகவும் சரி, தாங்கள் வைத்த கோரிக்கையால்தான் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லி வருகின்றனர்.. இதற்கு நன்றி தெரிவித்தும் மறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. இதை சற்று அதிகமாக சொல்வது பாமகதான்.. அதனால்தான், ராமதாஸின் இந்த ட்வீட்டுக்கும் அதேபோல கமெண்ட்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டுள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

"மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று வெளியில் வராத காக்கை குருவிகளுக்கு நன்றி. இது பாமக கோரிக்கைக்கு கிடைத்த 1147வது வெற்றி" என்றும் "சென்னையில காக்கை குருவியா? நீங்க பார்த்தீங்க... நல்லா பார்த்தீங்க.. அப்ப சரி" என்றும், பதிவுகள் விழுந்து வருகின்றன. ஆனால் பலரும் சூப்பர் அய்யா என்றும் பதிவிட்டு இந்த ட்வீட்டை வரவேற்றும் வருகின்றனர்.

English summary
chennai corona: pmk founder dr ramadoss tweet about chennai lockdown
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X