சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமாக இழுத்து பூட்டுங்கள் தமிழ்நாட்டை.. டெஸ்ட்டுகளை அதிகரியுங்கள்.. கட்டுப்படுத்த வேறு வழியில்லை!

சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் பரவுகிறது கொரோனா

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தமாகவே இழுத்து பூட்ட வேண்டி உள்ளது தமிழ்நாட்டை.. ஒரு பக்கம் டிஸ்சார்ஜ்கள் நடக்கின்றன.. இன்னொரு பக்கம் டெஸ்ட்கள் நடக்கின்றன.. ஆனாலும் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.. இது சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்திருப்பதுதான் கவலை அதிகரிக்க காரணம்.

Recommended Video

    தமிழக மருத்துவ நிபுணர் குழுவுக்கு முதல்வர் அழைப்பு.. என்னவாக இருக்கும்?

    தற்போது எல்லார் கவனமும் சென்னையை நோக்கியே உள்ளது.. அதனால் மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை என்றும் அல்லது தொற்று பரவல் குறைவு என்றும் பொதுவான கருத்து உள்ளது. ஆனால், சென்னையை போலவேதான் மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது என்பது கள நிலவரம் ஆகும்.

    இந்த 24 மணி நேரத்தில் 982 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.. எல்லாமே புது கேஸ்கள்தான்.. இவர்களில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 49 பேரும் அடங்குவர்.. இவர்களோடு சேர்த்தால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 40, 700-ஐ தொட்டுவிட்டது.

    3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா 3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா

    சுகாதாரத்துறை

    சுகாதாரத்துறை

    சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் சேர்த்துதான் இந்த எண்ணிக்கை. இந்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் ஒருவருக்குகூட தொற்று எதுவும் உறுதியாகவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதுதான்.. ஆனால் சென்னையில் மட்டும் இந்த 2 நாட்களில் 30 டாக்டர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது... இது எப்படி நடந்தது? பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டும் டாக்டர்களை தொற்று பாதித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

    டாக்டர்கள்

    டாக்டர்கள்

    நேற்றுமுன்தினம் மதுரவாயல் பகுதியில் ஒரு டாக்டர் இறந்தே விட்டார்.. இவ்வளவு நாள் தொற்றே குறைவு, தொற்றே இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு தென்பட ஆரம்பித்துள்ளது.. தூத்துக்குடியில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. விழுப்புரத்தில் 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நேற்றுகூட ஒருவர் இறந்துவிட்டார்.. அந்த மாவட்டத்தில் 4வது உயிர்பலி அது.

    வேகம்

    வேகம்

    ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் வெளியில் நடமாட தொடங்கிய பிறகே இந்த நோயின் தொற்றின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. அதனால் சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடத்த வேண்டி உள்ளது. கடந்த, 10 நாட்களில், கொரோனா அதிகம் பாதித்த 7 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

    டெஸ்ட்கள்

    டெஸ்ட்கள்

    அரியலூரில் 4 பேர், திருவள்ளூரில் 92 பேர் செங்கல்பட்டில் 128 பேர், காஞ்சிபுரத்தில் 26 பேர், கள்ளகுறிச்சியில் 13 பேர், மதுரையில் 31 பேர், சிவகங்கையில் 12 பேர் என நேற்று தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தொற்று இருந்தால் அதன் வீரியம் பலருக்கு பரவும் என்பதால், இந்த அத்தனை மாவட்டங்களிலுமே டெஸ்ட்களை விதி வீதியாக செய்ய வேண்டி உள்ளது. இதில் சென்னைக்கு பக்கத்திலேயே உள்ள திருவள்ளூரில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

    மாநகராட்சி

    மாநகராட்சி

    அதேபோல, சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டவர்களுக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் நெகட்டிவ் என்று வந்தாலும் சம்பந்தப்பட்ட நபர், மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லாரையுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.. இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், யாரும் தங்களை முன்வந்து பரிசோதித்து கொள்ள தயங்குவார்கள்... அதனால் உயிரிழப்புதான் ஏற்படும்.

    மறுபரிசீலனை

    மறுபரிசீலனை

    எனவே இந்த அறிவிப்பு பெருமளவு கைகொடுக்காது என்றே தெரிகிறது.. இதனையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது! ஒட்டுமொத்தமாக திரும்பவும் தமிழ்நாட்டை மீண்டும் இழுத்து பூட்டி, சோதனைகளையும் பெருமளவில் அதிகரித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இதில் அரசு உறுதியான நடவடிக்கையை விரைவாக எடுப்பது நல்லது.

    English summary
    chennai corona: tamilnadu gets covid 19 cases highly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X