சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீடு வீடாக பரிசோதனை... இன்று மட்டும் 539 காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்திய சென்னை மாநகராட்சி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலான மைக்ரோ திட்டத்தின் அடிப்படையில் மக்களை பரிசோதிக்க காய்ச்சல் முகாம்களை சென்னை மாநகராட்சி அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியானது இன்று மட்டும் 539 காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இதற்காக வகுக்கப்பட்ட மைக்ரோ திட்டத்தின் அடிப்படையில் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது. மேலும்,மொத்தமுள்ள 15 மண்டலங்களிலும் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா தீவிரம் எதிரொலி- மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன் கொரோனா தீவிரம் எதிரொலி- மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன்

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்

கோட்ட மருத்துவ அதிகாரி தலைமையில் சுகாதார ஆய்வாளர், வரி வசூலிப்பவர், தூய்மைப்பணி ஆய்வாளர் , 20 தன்னார்வலர்களை கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால்,, சென்னை மாநகராட்சி நிர்வாகம், காய்ச்சல் முகாம்களை தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தலின் பேரில், களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உடல் வெப்பத்தை கணிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வீடு வீடாக சென்று காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் உள்ளதா என தகவல் சேகரித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை

தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை

நேற்று முதல் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளும் தெர்மல் ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி கொண்டு வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். ஒருவருக்கு காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் அவரை உடனடியாக அடுத்தக்கட்ட பரிசோதனை அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு அனுப்பி பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்படுகிறார்கள்.

சென்னையில் 539 காய்ச்சல் முகாம்கள்

சென்னையில் 539 காய்ச்சல் முகாம்கள்

சென்னையில் நேற்று மட்டும் 357 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 20,525 பேர் பரிசோதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகருக்கும், சாதாரன காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று மட்டும் 539 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில்,சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகரெங்கும் தொற்று பரவலை கட்டுப்படுத்த தன்னார்வலர்களை வைத்து ,வீடுகளில் தனிமைப்படுத்துதலில் உள்ளோரை கண்காணிக்கும் புதிய திட்டத்தையும் மாநகராட்சி செயல்முறை படுத்தியுள்ளது.

Recommended Video

    Coronavirus-க்கு பயன்படுத்த அனுமதி... ஆனால் விலை எவ்வளவு தெரியுமா?
    சென்னையில் கொரோனா வாரியர்ஸ்

    சென்னையில் கொரோனா வாரியர்ஸ்

    மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆலோசனைப்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொரோனா வாரியர்ஸ் போன்று 200 புதிய குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சி அலுவலர், காவலர், 3 ஆசிரியர்கள் அல்லது ஆசிரியைகள் என மொத்தம் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்டுகளில் ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கை அளிக்க உள்ளது. மொத்தத்தில் சென்னையில் கொரோனா ஆய்வை அங்குலம் அங்குலமாக நடத்தி, மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது.

    English summary
    539 Fever clinics were conducted in Chennai on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X